Kathir News
Begin typing your search above and press return to search.

அலைக்கற்றை ஏலம் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும், இதுதான் நிர்வாகம் - மோடி அரசை புகழ்ந்த ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டல்

'அலைக்கற்றை ஏலத்தை மத்திய அரசு முறையாக நடத்தி உள்ளது' என பாராட்டியுள்ளார் ஏர்டெல் நிறுவனர் சுனில் பாரதி மெட்டல்.

அலைக்கற்றை ஏலம் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும், இதுதான் நிர்வாகம் - மோடி அரசை புகழ்ந்த ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டல்

Mohan RajBy : Mohan Raj

  |  19 Aug 2022 6:53 AM GMT

'அலைக்கற்றை ஏலத்தை மத்திய அரசு முறையாக நடத்தி உள்ளது' என பாராட்டியுள்ளார் ஏர்டெல் நிறுவனர் சுனில் பாரதி மெட்டல்.

5ஜி அலைக்கற்றைக்கான முன்பணம் ரூபாய் 8,312 கோடியை செலுத்திய சில மணி நேரங்களில் மத்திய தொலைதொடர்புத்துறை அலைக்கற்றை ஒதுக்கீடு கடிதத்தை வழங்கியதாகவும் இத்துறையுடன் 30 ஆண்டுகள் அனுபவத்தில் அன்றைய தினமே ஒதுக்கீடு கடிதம் பெறுவது இதுவே முதல் முறை எனவும் மிட்டல் வியந்துள்ளார்.

ஏர்டெல் நிறுவனம் 43,000 கோடிக்கு அழைக்கற்றிய ஏலம் எடுத்துள்ளது, தற்பொழுது ஏலத்தில் வென்ற நிறுவனங்கள் முன்பணம் செலுத்தி வருகின்றன இதுவரை தொலைத்தொடர்பு துறைக்கு 17,870 கோடி கட்டணம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் பணம் செலுத்திய சில மணி நேரங்களையே அலைக்கற்றை ஒதுக்கீடு கடிதம் கிடைத்ததை வியந்து அறிக்கை வெளியிட்டுள்ளார் ஏர்டெல் தலைவர் சுனில் பாரதி மிட்டல். அதில் அவர் கூறியிருப்பதாவது, 'ஏர்டெல் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் காரணமாக 8,312 தொகை கோடி செலுத்தியது பணம் செலுத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குள் நிர்ணயிக்கப்பட்ட அலைவரிசைக்கான ஒதுக்கீடு கடிதத்தை தொலைத் தொடர்புதுறை வழங்கியது. உறுதி அளித்தபடி ஸ்பெக்ட்ரத்துடன் வழங்கப்பட்டது

பதற்றம் இல்லை, ஃபாலோ இல்லை, காரிடாரில் அவர்கள் பின் சுற்றிவர வேண்டியதில்லை, இதுதான் சுலபத்தில் வியாபாரம் செய்யும் முயற்சியின் சாதனை. தொலைத்தொடர்பு துறையில் எனது 30 ஆண்டு கால நேரடி அனுபவத்தில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை.

தொழில் நடத்துவது இப்படித்தான் இருக்க வேண்டும். தலைமையில் இருப்பவர்களும் டெலிகாம் தலைமையும் சரியாக வேலை செய்கிறார்கள். இந்த ஒரு மாற்றம்தான் இந்தியாவை புரட்டிப் போட உள்ளது. இந்த மாற்றம் வளர்ச்சி அடைந்த தேசமாக இருக்க வேண்டும் என்ற கனவுகளுக்கு சக்தி அளிக்கக் கூடியது' என புகழ்ந்துள்ளார்.



Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News