Kathir News
Begin typing your search above and press return to search.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யானின் எதிர்காலத் திட்டம் இதுதான்.!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யானின் எதிர்காலத் திட்டம் இதுதான்.!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யானின் எதிர்காலத் திட்டம் இதுதான்.!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 Feb 2021 3:54 PM GMT

ககன்யானின் இரண்டாவது ஆளில்லா பணி 2022-23 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதைத் தொடர்ந்து மனித விண்வெளிப் பயணம், பற்றிய ஆரம்பகட்ட வேலைகள் விரைவில் தொடங்கும் என்று மத்திய அரசாங்கம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. இந்தியா 75 ஆண்டு சுதந்திர தினத்தை நிறைவடையும் போது, 2022 ஆம் ஆண்டில் ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினரை விண்வெளிக்கு அனுப்புவதே ரூ.10,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட ககன்யான் திட்டத்தில் நோக்கம் ஆகும்.

"முதல் ஆளில்லாத விமானத்தை அனுப்பும் பணி 2021ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட உள்ளது மற்றும் இரண்டாவது ஆள் இல்லாத விமானம் பயணம் 2022 மற்றும் 23 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டமிட்டுள்ளது என்றும் மேலும் அதனை தொடர்ந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பயணம் ஆரம்பமாகும் என்றும்" மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலை தற்போது அளித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து ஜிதேந்திர சிங்கின் கூறுகையில், "விண்வெளி பயணத்தை தாமதமாக தொடங்குவதற்கு காரணங்களில் ஒன்று. இந்திய விண்வெளி வீரர்கள் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக ரஷ்யாவிலுள்ள காகரின் காஸ்மோனாட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். அதனால் இந்த பணி சற்று தாமதமாக நடைபெறுகிறது. covid-19 தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்த பயிற்சியானது தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் விரைவில் சாத்தியமாகும்" என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறுகையில், "ககன்யானின் முதல் ஆளில்லா பயணம் 2021 டிசம்பர் இறுதியில் நடைபெற திட்டமிடப் பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் மனிதர்களைக் கொண்ட விண்வெளி பயணத்திற்காக இந்திய விண்வெளி வீரர்கள் ரஷ்யாவின் விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களின் அந்த பயிற்சி நிறைவு இந்தத் திட்டத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்" என்றும் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News