எல்லையில் கால்நடை கடத்தல் வழக்கில் மூன்று BSF அதிகாரிகள் பணிநீக்கம், பலர் இடமாற்றம்.!
எல்லையில் கால்நடை கடத்தல் வழக்கில் மூன்று BSF அதிகாரிகள் பணிநீக்கம், பலர் இடமாற்றம்.!
By : Saffron Mom
இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் கால்நடை கடத்தல் தொடர்பான வழக்கில் எல்லை பாதுகாப்புப் படையில்(BSF) உயர் பொறுப்பில் இருக்கின்ற மூன்று அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை இருப்பினும் அவர்கள் வெள்ளிக்கிழமை நடந்த விசாரணையில் ஒப்புக்கொண்டனர். இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் கால்நடை கடத்தல் தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வுத் துறை விசாரித்து வருகின்றனர்.
மேலும் அறிக்கையில், BSF இயக்குநர் பங்கஜ் குமார் சிங் தெரிவித்ததில், கால்நடை கடத்தல் தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 12 க்கும் மேற்பட்ட நபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். "மூன்று BSF அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 12 க்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அனைத்து தகவல்களும் CBI பகிர்ந்துள்ளது," என்று சிங் தெரிவித்தார். மேலும் எல்லைப் பகுதியில் உள்ள மக்களைக் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க அச்சுறுத்துவதாக TMC யை சிங் குற்றம்சாட்டினார்.
இந்த ஆண்டு ஜனவரியில் CBI திரிணமூல் காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவர் வினய் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பியது. இவர் மேற்கு வங்காள தலைவர் மம்தாவின் உறவினர் அபிஷேக் மிஸ்ராவின் நெருங்கிய நபர் என்றும் கூறப்படுகின்றது. கடந்த ஆண்டு டிசம்பரில் மிஸ்ராவின் அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் CBI சோதனை மேற்கொண்டது. மேலும் மிஸ்ரா வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்கத் தேடல் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் எல்லையில் கால்நடை கடத்தல் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியான எனமூல் ஹைகை CBI கைது செய்தது. மேலும் எனமூல் ஹைக் உட்பட BSF பட்டொளியோனை சேர்ந்த சதீஷ் குமார், முஹம்மத் குலாம் முஸ்தபா ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.