திருப்பதியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.!
ஆந்திர மாநிலம், திருப்பதி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், திருப்பதி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், திருப்பதியில் எஸ்.வி.ஆர். ருயா அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. அந்த மாவட்டத்தில் பாதிக்கப்படும் கொரோனா நோயாளிகள் அனைவரும் எஸ்.வி.ஆர். ருயா அரசு மருத்துவமனையில்தான் பெரும்பாலானோர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். இதனிடையே நேற்று இரவு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
இது பற்றி திருப்பதி மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறும்போது: சென்னையில் இருந்து மருத்துவமனைக்கு வரும் ஆக்சிஜன் டேங்கர் லாரி தாமதமானது. இதனால் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக ஆக்சிஜன் சிலிண்டர்களையும் மருத்துவமனை ஊழியர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
கிட்டத்தட்ட 30 நிமிடம் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. உடனடியாக ஆக்சிஜன் டேங்கர் லாரி வந்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது எனக் கூறினார்.