சர்க்கரை இல்லாமல் இனி திருப்பதி லட்டு பிரசாதமா? தேவஸ்தான அதிகாரிகள் விளக்கம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சர்க்கரை இல்லாமல் இனி லட்டு பிரசாதம்.
By : Bharathi Latha
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சர்க்கரை இல்லாத லட்டு பிரசாதம் வழங்க முடியுமா? என்பதற்கு தேவஸ்தான அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளார்கள். திருமலையில் உள்ள அன்னமய பவானியில் சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஏ.வி தர்மா ரெட்டி தலைமையிலான பக்தர்களிடம் இருந்து தொலைபேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் குறைகள் முன்வைக்கப்பட்டன.
அப்பொழுது ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த தசரதன் என்ற பக்தர் பேசும் பொழுது, திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் இனிப்பு சற்று அதிகமாக உள்ளது. லட்டு பிரசாதத்தை என் போன்ற சர்க்கரை நோயாளிகள் சாப்பிட முடியாது. லட்டு பிரசாதத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு வசதியாக, திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஏற்பாடு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என கூறி இருக்கிறார். அதற்கு தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஏவி தர்மா ரெட்டி பதில் அளிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் வைணவ பிராமணர்களால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
இது அந்தத் திட்டப் பரிகாரப்படி தயாரிக்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு என்று தனியாக லட்டு பிரசாதம் தயாரித்து வழங்கினால், ஏதாவது காரணத்தை வைத்து சில பக்தர்கள் வேறு சில பிரசாதனங்களை கேட்பார்கள். எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு என்று தனியாக லட்டு பிரசாதம் ஏற்பாடு செய்ய தற்போதைக்கு முடியாது என்று விளக்கம் அளித்துள்ளார்.
Input & Image courtesy: News