விவசாய மசோதாவுக்கு ஆதரவாகப் பேரணி நடத்திய பா.ஜ.க உறுப்பினர்களைத் தாக்கிய TMC தொண்டர்கள்.!
விவசாய மசோதாவுக்கு ஆதரவாகப் பேரணி நடத்திய பா.ஜ.க உறுப்பினர்களைத் தாக்கிய TMC தொண்டர்கள்.!

By : Kathir Webdesk
மத்திய அரசு கொண்டுவந்த விவசாய மசோதாக்களுக்கு ஆதரவாக மேற்கு வங்காளம் பார்தமன் மாவட்டத்தில் புர்பஸ்தாலியில் புதன்கிழமை அன்று பேரணி நடத்தது. அதில் பங்குபெற்ற பா.ஜ.க உறுப்பினர்களை திரிணாமூல் காங்கிரஸ் கும்பல் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த விவசாய மசோதாவுக்கு ஆதரவாக பா.ஜ.க தொண்டர்கள் பேரணி ஏற்பாடு செய்திருந்தனர். அந்த பேரணியில் பங்குபெற்ற பா.ஜ.க தொண்டர்களை TMC உறுப்பினர்கள் லத்தியால் தாக்கியுள்ளனர், அதில் பல பா.ஜ.க தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சமத்துவம் குறித்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. அதில் பா.ஜ.க தொண்டர்கள் மேல் TMC உறுப்பினர்கள் எவ்வாறு வன்முறையைச் செலுத்தியுள்ளனர் என்பது காணமுடிகின்றது. பலர் காயமடைந்து சாலையில் கிடந்ததையும் காண முடிந்தது.
பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் பிபுல் தாஸ் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் காயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் மேற்கு வங்காள காவல்துறை சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்தது. காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் செய்ததற்கு மேற்கு வங்காள காவல்துறையும் TMC உறுப்பினர்களும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. அக்டோபர் 8 இல் BJYM மற்றும் பா.ஜ.க உறுப்பினர்கள் நடத்திய 'நபன்னோ சலோ' பேரணியில் மேற்கு வங்காள காவல்துறையினர் அவர்கள் மீது லத்தி சார்ஜ் செய்தது. மேலும் அந்த வன்முறையில் TMC உறுப்பினர்களும் இணைந்து பா.ஜ.க தொண்டர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகள் முதலியவை கொண்டும் தாக்கினர். அந்த வன்முறையில் 450 பா.ஜ.க தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
