Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா தடுப்பூசி ஏற்றிவந்த லாரியை வழிமறித்த TMC தலைவர் சித்திகுல்லா சவுத்ரி!

கொரோனா தடுப்பூசி ஏற்றிவந்த லாரியை வழிமறித்த TMC தலைவர் சித்திகுல்லா சவுத்ரி!

கொரோனா தடுப்பூசி ஏற்றிவந்த லாரியை வழிமறித்த TMC தலைவர் சித்திகுல்லா சவுத்ரி!

Saffron MomBy : Saffron Mom

  |  14 Jan 2021 6:30 AM GMT

தற்போது நிகழ்ந்து வரும் கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி மக்களுக்குச் செலுத்துவதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றது. அதேபோன்று கொல்கத்தாவில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள பங்குரா பகுதிக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றிச்செல்லும் லாரி, TMC தலைவரும் மற்றும் ஜாமியத் உலேமா- இ- ஹிந்த் தலைவருமான சித்திகுல்லா சவுத்ரி நடத்தும் போராட்டத்தால் சாலையில் வழிமறித்து நிறுத்தப்பட்டது.

இந்த சம்பவம் குறித்த வீடியோவை டிவிட்டரில் பா.ஜ.க தேசிய செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா பகிர்ந்தார். அதில் சவுதிரி விவசாய போராட்டத்தை நடத்துபவர்களுக்கு எதிராகக் கம்பினை எடுத்துச் சென்றதைக் காண முடிந்தது. "மேற்கு வங்காள அமைச்சர் சித்திகுல்லா சவுத்ரி விவசாய மசோதாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகிறார். சவுதிரி சாலையில் ஏற்படுத்திய தடுப்புகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் செய்யத் தொடங்கியதில், அவர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மக்களை நோக்கி கம்பால் தாக்கத் தொடங்கினர்," என்று கைலாஷ் தெரிவித்திருந்தார். இது அவரது கபட நாடகம் என்று எடுத்துக்கொள்ளலாமா என்று கைலாஷ் கேள்வி எழுப்பினார்.

அறிக்கையின் படி, சாலை தடுப்புகளை மக்கள் அகற்ற வந்த பொழுது சித்திகுல்லா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவர்களிடம் சண்டையிடத் தொடங்கினர். தடுப்பூசிகளைக் கொண்டுசெல்லச் சாலையைத் தடைகளைத் தடுக்க முயன்றவர்களை சவுத்ரி தாக்கத் தொடங்கியுள்ளார்.

ஜனவரி 12 செவ்வாய்க்கிழமை அன்று புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடூட் ஆப் இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசி எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஜனவரி 16 இல் செயற்படுத்தப்படும். மேலும் தடுப்பூசியின் செயல்திறன் குறையாமல் இருக்க அதனைக் குறிப்பிட்ட வெப்பநிலையில் வைக்க வேண்டும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News