Begin typing your search above and press return to search.
சென்னையில் 2வது விமான நிலையம் அமைக்க இடம் இறுதி செய்யாத தமிழக அரசு.. மத்திய அரசு குற்றச்சாட்டு.!
சென்னைக்கு அருகே 2வது விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை இன்னும் தமிழக அரசு இறுதி செய்யவில்லை என்று மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

By : Thangavelu
சென்னைக்கு அருகே 2வது விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை இன்னும் தமிழக அரசு இறுதி செய்யவில்லை என்று மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
மக்களவையில் அதிமுக எம்.பி., ரவீந்தரநாத் குமார் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமான பதிலை மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் அளித்துள்ளது. சென்னைக்கு அருகாமையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 2வது விமான நிலையம் அமைப்பதற்கான கோரிக்கையை மாநில அரசு வழங்கியதாக கூறப்பட்டது.
இதற்கான தரவுகள் அனைத்தும் இறுதி செய்து 2011ம் ஆண்டு தமிழக அரசிடம் வழங்கிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இன்று வரை நிலத்தை ஒப்படைப்பதற்கான அனுமதியை மாநில அரசு வழங்கவில்லை என்று விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
Next Story
