Kathir News
Begin typing your search above and press return to search.

அரசு எந்தெந்த மாநிலங்களுக்கு ரூ4,382 கோடியை ஒதுக்கீடு செய்தது.!

அரசு எந்தெந்த மாநிலங்களுக்கு ரூ4,382 கோடியை ஒதுக்கீடு செய்தது.!

அரசு எந்தெந்த மாநிலங்களுக்கு ரூ4,382 கோடியை ஒதுக்கீடு செய்தது.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 Nov 2020 1:30 PM IST

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு, இந்த ஆண்டு ஒவ்வொரு மாநிலமும் சந்தித்த இயற்கை பேரழிவுகளுக்கு காரணமாக மத்திய உதவியாக ஆறு மாநிலங்களுக்கு மட்டும் ரூ.4,382 கோடியை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டு மாநிலங்கள் எதிர்கொண்ட சூறாவளி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு உதவியாக அரசு தரப்பில் இருந்து இந்த நிதி உதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி உதவி பெறும் மாநிலங்கள் மேற்கு வங்கம், ஒடிசா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் சிக்கிம் ஆகியவை ஆகும்.

மேற்கு வங்கம், ஒடிசா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் சிக்கிம் ஆகிய ஆறு மாநிலங்களில் மட்டும் இந்த ஆண்டு கடும் இயற்கை பேரழிவில் சிக்கி மீண்டு உள்ளன. இதன் காரணமாக, தேசிய பேரிடர் மறுமொழி நிதியிலிருந்து 'பேரழிவு நிதி உதவி' வழங்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மறுமொழி நிதியிலிருந்து (NDRF) ஆறு மாநிலங்களுக்கு கூடுதல் மத்திய உதவிக்கு ரூ.4,381.88 கூடிய வழங்க உயர்மட்டக்குழு முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் சார்பில் தற்போது தகவல் வெளிவந்துள்ளது.'ஆம்பான்' சூறாவளியில் சிக்கியதற்காக மேற்கு வங்கத்திற்கு ரூ .2,707.77 கோடியும், ஒடிசாவுக்கு ரூ .128.23 கோடியும் அனுமதிக்கப்பட்டுள்ளன. 'நிசர்கா' சூறாவளியை எதிர்கொண்ட மகாராஷ்டிராவுக்கு ரூ .268.59 கோடி தர உள்ளதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக கர்நாடகாவுக்கு ரூ .577.84 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ .611.61 கோடியும், சிக்கிமுக்கு ரூ .87.84 கோடியும் அனுமதிக்கப் பட்டுள்ளன.

'ஆம்பான்' சூறாவளிக்கு மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா பாதிக்கப்பட்டபோது, திரு. நரேந்திர மோடி அவர்கள் மே 22ஆம் தேதி பார்வையிடுவதற்கு சென்றார். அப்பொழுது அவர் உறுதியளித்தார் கண்டிப்பாக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார். அதேபோல இப்போது நிதி ஒதுக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் அறிவித்தபடி, மேற்கு வங்கத்திற்கு ரூ .1,000 கோடியும், ஒடிசாவிற்கு ரூ .500 கோடியும் நிதி உதவி மே 23 அன்று இரு மாநிலங்களிலும் உடனடி நிவாரண நடவடிக்கைகளுக்காக வெளியிடப்பட்டது. மேலும், இந்த சூறாவளியில் சிக்கி இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ .2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ .50 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News