இன்று அறிமுகம் ஆகிறது டிஜிட்டல் கரன்சி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
இன்று டிஜிட்டல் கரன்சி அறிமுகமாகிறது என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
By : Bharathi Latha
நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். தற்பொழுது நாம் பயன்படுத்தும் காகிதம் மற்றும் பணம் வடிவிலான ரூபாய் களும் மற்றும் உலோக நாணய வடிவத்திலும் உள்ளன. அதை போன்று டிஜிட்டல் கோட் பயன்படுத்தி டிஜிட்டல் கரன்சி உருவாக்கப் படுகிறது.தனியார் துறையும் இதை வெளியிடுகிறார்கள்.
காகித பணத்துக்கு நிகராக டிஜிட்டல் கரன்சியும் மதிக்கப்படுகிறது. ஒரு சில நாடுகளில் மட்டுமே டிஜிட்டல் கரன்சியை அங்கீகரிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ரிசர்வ் வங்கி முதல் முறையாக டிஜிட்டல் கரன்சியை இன்று வெளியிடுகிறது. சோதனை அடிப்படையில் இந்த கரன்சி வெளியிடப்படுகிறது. இதற்கு டிஜிட்டல் ரூபாய் மொத்த விலை பிரிவு என்று பெயரிடப்பட்டுள்ளது. அரசு பங்கு பத்திரங்களின் பரிமாற்றம் செய்வதற்கு இந்த டிஜிட்டல் கரன்சி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறது.
இதில் கிடக்கும் அனுபவத்தை பொறுத்து இதர பரிமாற்றங்களுக்கும் இந்த கரன்சி பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது. முதலில் பாரத் ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, HDFC, ICICI வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, YES வங்கி, IDFC வங்கி ஆகிய 9 வங்கிகள் மூலமாக வெளியிடப்படுகிறது. இதை போல் டிஜிட்டல் ரூபாய் சில்லறை பிரிவு என்ற டிஜிட்டல் கரன்சி இன்னும் ஒரு மாதத்தில் குறிப்பிடத்தக்க நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த கரன்சியை வாடிக்கையாளர்கள் வியாபாரிகள் பயன்படுத்தலாம்.
Input & Image courtesy: News