தேசீய பத்திரிக்கையாளர் தினம்: உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா வாழ்த்து.!
தேசீய பத்திரிக்கையாளர் தினம்: உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா வாழ்த்து.!

By : Rama Subbaiah
பத்திரிகைகள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும், அதே சமயம் பத்திரிகைகளின் குரல்வளையை நெரிப்பவர்களை மோடி அரசு கடுமையாக எதிர்க்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவம்பர் 16ஆம் நாளை தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளைக் கவுரவிக்கும் விதத்தில் தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இன்றைய நாளில் பத்திரிக்கைகளின் மதிப்புக்குரிய பணியை பாராட்டி தேச தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறுவது வழக்கம்.அதன்படி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் ''நமது தேசத்தை வலுப்படுத்த நம்முடைய ஊடக சகோதரத்துவம் அயராது உழைத்து பாடுபடுகிறது, பத்திரிகைகள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும், அதே சமயம் அதன் குரல்வளையை நெரிப்பவர்களை மோடி அரசு மிகவும் கடுமையாக எதிர்க்கிறது. இந்நிலையில் கொரோனா காலங்களில் ஊடகங்களின் குறிப்பிடத்தக்க பங்கை நான் பாராட்டுகிறேன்''. இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார்.
