மருத்துவ உபகரண உற்பத்தியில் முதல் 5 நாடுகளில் இந்தியா: மத்திய அமைச்சர் பெருமிதம்!
உயிரைக் காக்கும் மருத்துவ உபகரண உற்பத்தியில் முதல் ஐந்து நாடு பட்டியல்களில் இந்தியாவும் இடம் பெற்று இருக்கிறது.
By : Bharathi Latha
டெல்லியில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஒன்றில் ஒருங்கிணைந்த உபகரணங்கள் திறப்பு விழாவில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜித்தேந்திர சிங் கலந்து கொண்டார். பின்னர் அவரும் உரையாற்றுகையில், செயற்கை இதய வால்வு, ஆக்சிஜனிட்டர் உள்ளிட்ட சில தொழில்நுட்பம் சார்ந்த உபகரணங்கள் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், சீன போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நான்கு நாடுகள் வரிசையில் இந்தியாவும் இணைந்து இருக்கிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவில் இடம் கிடைத்து இருக்கிறது.vஇவற்றின் விலையானது பிற நாடுகளின் விற்பனை விலையில் மூன்றில் ஒரு பங்கு விலையிலேயே இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதாவது மற்ற நாடுகளில் இத்தகைய உபகரணங்களின் விலை அதிகமாக இருக்கும். ஆனால் இந்தியாவில் மட்டும் தான் இதகை உபகரணங்கள் மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான்.
இதை தவிர உலக தரத்திலான உள்நாட்டு உற்பத்தி உபகரணங்கள் வெளிநாட்டில் இறக்குமதி பொருட்களுடன் ஒப்பிடும் பொழுது, மூன்றில் ஒரு பங்கு முதல் நான்கில் ஒரு பங்கு வரை குறைந்த விலையில் இந்திய நோயாளிகளுக்கு கிடைக்கப்பெறும். பிரதமர் மோடியின் ஆத்ம நிர்பார் தொலைநோக்கு திட்டத்தின் கீழ் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ மேலாண்மையில் சுயசார்பு பிரதிபலிக்கும் வகையில் நாடு தற்போது இருக்கிறது என்று பெருமிதத்துடன் மத்திய அமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Thanthi News