மத்திய அரசு அறிவித்தபடி இன்று தாஜ்மஹால் திறப்பு.. சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு.!
இந்திய தொல்லியல் துறையின் கீழ்வரும் நினைவுச்சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள், சுற்றுலா தளங்கள் இன்று முதல் திறக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி அனைத்து சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள், நினைவு சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் கடந்த 2 மாதங்களுக்கு மேல் பூட்டப்பட்டிருந்தது. இதனிடையே தொற்று குறைந்து வரும் சூழ்நிலையில் மத்திய தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் சுற்றுலாத்தளங்கள் உட்பட அனைத்தும் இன்று முதல் திறக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி இன்று நாடு முழுவதும் உள்ள 3,693 நினைவுச்சின்னங்கள் மற்றும் 50 அருங்காட்சியகங்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகைதருவதற்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாஜ்மஹால் இன்று முதல் திறக்கப்பட்டது. ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என தொல்லியல்துறை கூறியிருந்தது. அதன்படி இன்று 650 பேர் மட்டுமே தாஜ்மஹாலை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.