Kathir News
Begin typing your search above and press return to search.

சபரிமலைக்கு ரயில் சேவை.! நிறைவேறப்போகும் நெடுநாள் திட்டம்.!

சபரிமலைக்கு ரயில் சேவை.! நிறைவேறப்போகும் நெடுநாள் திட்டம்.!

சபரிமலைக்கு ரயில் சேவை.! நிறைவேறப்போகும் நெடுநாள் திட்டம்.!

Saffron MomBy : Saffron Mom

  |  10 Jan 2021 6:00 AM GMT

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அங்காமலையை, கேட்டயம் மாவட்டத்திலுள்ள எரிமேலி உடன் இணைக்கும் சபரிமலை ரயில் திட்டம் 1997-98 பட்ஜெட்டில் 517 கோடி ரூபாய் செலவில் அறிவிக்கப்பட்டது.

இந்த எரிமேலி சபரிமலை அடித்தளமான பாம்பனில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அப்பொழுது இந்த 111 கிலோமீட்டர் ரயில்வே திட்டத்தில் ரயில்வே துறை அக்கறை காட்டவில்லை, கேரள அரசாங்கம் ஆர்வமுடன் இருந்ததால் 50 சதவிகித செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதித்தது.

இதற்கு பதிலாக கேரள அரசு அந்த வழியே பராமரிக்கும் பொறுப்பை வழங்க வேண்டும் என்று கேட்டு இருந்தது. அப்போதிலிருந்து இந்த திட்டத்தின் செலவு 517 கோடியிலிருந்து 2817 கோடி ஆக ஐந்து மடங்கு அதிகரித்துவிட்டது. சபரிமலை ஐயப்ப பக்தர்களின் பலன் அளிக்கும் இந்த திட்டம் 23 வருடங்களாக கிடப்பில் இருந்து, தற்பொழுது பாதி செலவை ஏற்றுக்கொள்ள கேரள அமைச்சரவை முன்வந்திருப்பதை அடுத்து முன்வந்திருக்கிறது.

27 ஜனவரி 2016யில் வணிகரீதியான சாத்தியமான திட்டங்களை அடையாளம் காணும் பொருட்டு ரயில்வே அமைச்சகமும் கேரள அரசும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அப்பொழுது இந்த திட்டத்திற்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்தது.

இந்த திட்டம் பின்னர் ஒரு சிறப்பு நோக்க வெஹிக்கிலிடம் ஒப்படைக்கப்பட்டு 51: 49 சதவிகித விகிதத்தில் பிரித்துக் கொள்ளப்படும். இதில் மாநிலமே அதிக பங்கை கொண்டிருக்கும். இதில் வரும் லாபம் சமமாக பிரித்துக் கொள்ளப்படும்.இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த திட்டத்தை எரிமேலியிலிருந்து கொல்லத்தில் உள்ள புனலூர் வரை நீட்டிக்கவும், வழி வகுக்கும். அடுத்து இரண்டாவது கட்டத்தில் தமிழ்நாட்டை இணைக்கும். மூன்றாவது கட்டத்தில் புனலூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள நேமமில் இணைக்கப்படலாம்.

தற்பொழுது புணலூர்- தென்காசிக்கு 4 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடம் அகல பாதையாக இரண்டு வருடங்களுக்கு முன்னால் மாற்றப்பட்டது. கேரள அரசாங்கம் இந்த நில கையகப்படுத்துவதற்கு சர்வேயை நிறைவு செய்தது.

கல்லடிக்கு 90 சதவிகித ரயில்வே லைன் அமைக்கும் பணி 2010இல் நிறைவடைந்தது. இது அங்கமலையில் இருந்து 7.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சுவாரஸ்யமாக பிரதமர் அலுவலகமும் சபரிமலை திட்டத்தை கண்காணித்து வருகிறது இது கேரளாவின் இடுக்கி, கேட்டயம், பத்தனம்திட்டா மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு பயண வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.

தற்போது இடுக்கி மாவட்டம் எந்த ரயில்வே ஸ்டேஷனையும் பெற்றிருக்கவில்லை. இந்த திட்டம் வழியாக அதற்கு ரயில் இணைப்பு கிடைக்கும். இந்த மாவட்டத்தில் இரண்டு ரயில்வே ஸ்டேஷன்கள் அமைக்கப்படும். மத அடிப்படையிலான பெரம்பூர் மற்றும் காலடி பகுதிகளும் எர்ணாகுளம் மாவட்டத்தில் இந்த திட்டத்தினால் பலனடையும்.

சபரிமலையில் ஒரு பசுமையான விமான தளம் அமைக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டு இருக்கும் கொண்டிருக்கும் வேளையில் இந்த ரயில்வே திட்டம் வருகிறது. ஆனால் அந்த விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு கையகப்படுத்த வேண்டிய ஒரு ரப்பர் தோட்டத்தின் உரிமையை பொறுத்து ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. தற்பொழுது சபரிமலை யாத்திரிகர்கள் கொச்சி அல்லது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்கி பம்பாவிற்கு காரில் வருகின்றனர். ரயிலில் வருபவர்கள் கோட்டயம் அல்லது செங்கநூற்கு வந்து அரசு பேருந்துகள் அல்லது வண்டியில் பம்பைக்கு வருகிறார்கள்.

With Inputs from Swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News