Kathir News
Begin typing your search above and press return to search.

62 வயது பா.ஜ.க தொண்டரைக் கூட கொலை செய்த திரிணாமுல் கட்சியினர்? தொடரும் அட்டூழியம்.!

62 வயது பா.ஜ.க தொண்டரைக் கூட கொலை செய்த திரிணாமுல் கட்சியினர்? தொடரும் அட்டூழியம்.!

62 வயது பா.ஜ.க தொண்டரைக் கூட கொலை செய்த திரிணாமுல் கட்சியினர்? தொடரும் அட்டூழியம்.!
X

Saffron MomBy : Saffron Mom

  |  13 Nov 2020 12:30 PM IST

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க தொண்டர்களை குறிவைத்து தொடரும் அரசியல் படுகொலைகள் குறித்து பிரதமர் மோடி கூட நேற்று எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸின் உள்ளூர் தலைவரை எதிர்த்து புகார் அளித்ததற்காக, 62 வயது பா.ஜ.க தொண்டர் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TMC கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பாரதி டோலூயின் கணவருக்கு கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரானா விதிமுறைகளை பயன்படுத்தி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல், அவர் ஊர் சுற்றி வந்ததாக உள்ளூர் மக்களால் கூறப்படுகிறது.

இதனை எதிர்த்து பா.ஜ.க தொண்டர் அந்தப்பகுதி ASHA தொண்டர் மிநாத்தி டோலூயிடம் புகார் அளித்தார். அவரின் கணவரும், மைத்துனரும் முதியவரை தாக்கி உள்ளனர். இதில் அந்த முதியவர் மரணமடைந்தார். முதியவரின் இறப்பு தொடர்பாக இவ்விருவரும் தற்போது போலீஸ் விசாரணையில் உள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பா.ஜ.க தொண்டர் 62 வயதுடைய கோகுல் சந்திர ஜனா என அறியப்பட்டுள்ளார். கிராம பஞ்சாயத்து தலைவரும் உள்ளூர் டிஎம்சி தலைவருமான சுமித் ஜனா கூறுகையில், அந்த முதியவர் ஏன் இறந்தார் எனத் தெரியவில்லை என்றும் அதைப் பற்றி விசாரிக்க உள்ளதாகவும் கூறினார்

இது குறித்து பா.ஜ.க கூறுகையில், கொல்லப்பட்ட முதியவர் ஜனா தங்கள் கட்சி உறுப்பினர் என்றும் ஒரு டிஎம்சி தலைவர் கொரானா வைரஸ் விதிகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகாரின் காரணமாக கொல்லப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இது மேற்கு வங்க மாநிலத்தில் சரிந்துவிடும் ஜனநாயகத்தை காட்டுவதாகவும் கூறியுள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசு, எதிர்க்கட்சியான பா.ஜ.கவிற்கு எதிராக அரசியல் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்பது பலகாலமாகவே தெளிவாக உள்ளது. 2019 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற போது, இப்படி அரசியல் படுகொலை செய்யப்பட்ட பா.ஜ.கவினரின் குடும்பத்தை பதவியேற்பு விழாவுக்கு அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக இத்தகைய மூர்க்கத்தனமான கொலைகள் அதிரிப்பதும் அவை தற்கொலை போல காட்டப்படுவதும் நடந்து வருகிறது. விசாரணை என்று அழைத்து சென்று போலீஸ் கஸ்டடியில் மரணம் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. மிகவும் வெளிப்டையாகப் பேசும் தன்மையுள்ள ஆளுநர், மாநில காவல் தலைமை மீது "அரசியல் எதிராளிகள் மீது தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விடுவதாக" கடும் குற்றம் சாட்டி வருகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News