Kathir News
Begin typing your search above and press return to search.

அன்னை தெரசா அறக்கட்டளை விவகாரத்தை அரசியலாக்கும் திரிணாமுல் காங்கிரஸ் : கோவா தேர்தலில் சிறுபான்மையின வாக்கு வங்கிக்கு குறி!

Trinamool to take Mother Teresa charity’s FCRA rejection to Goa poll field

அன்னை தெரசா அறக்கட்டளை விவகாரத்தை அரசியலாக்கும் திரிணாமுல் காங்கிரஸ் : கோவா தேர்தலில் சிறுபான்மையின வாக்கு வங்கிக்கு குறி!
X

MuruganandhamBy : Muruganandham

  |  29 Dec 2021 11:58 AM GMT

அன்னை தெரசா மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் புதுப்பித்தல் விண்ணப்பத்தை நிராகரித்த மத்திய அரசின் முடிவு வெளிநாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸிற்கு தேர்தல் பிரச்சார காரணியாக உருவெடுத்துள்ளது. கிறிஸ்தவர்கள் வாக்குவங்கி அதிகமுள்ள கோவா சட்டமன்றத் தேர்தலில் இந்த வியூகத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

வரவிருக்கும் கோவா தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக போட்டியிட, இந்த காரணத்தை திரிணாமுல் கையிலெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. கிறிஸ்தவர்கள் மீதான சமீபத்திய தாக்குதல்கள் மற்றும் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் புதுப்பித்தல் விண்ணப்பத்தை நிராகரித்தது ஆகியவை கோவாவில் பாஜகவுக்கு எதிரான எங்கள் கருவிகளில் ஒன்றாக இருக்கும். கடலோர மாநிலத்தில், மக்கள் தொகையில் 25 சதவீதத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் உள்ளனர்," என்று கொல்கத்தாவில் உள்ள ஒரு மூத்த டிஎம்சி தலைவர் கூறினார்.

கிறிஸ்தவ வாக்காளர்களை தங்களுக்கு சாதகமாக ஒருங்கிணைக்க முயல்வதாக திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம், 2010 இன் கீழ் பதிவு செய்வதற்கான மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் புதுப்பித்தல் விண்ணப்பத்தில் சில முறைகேடுகள் இருந்ததை தொடர்ந்து மத்திய அரசு அதனை நிராகரித்தது.

"மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியால் எந்தத் தவறும் செய்ய முடியாது என்று நாங்கள் நம்புகிறோம். அவர்கள் ஏழைகளுக்கும் மக்களுக்கும் சேவை செய்கிறார்கள். அவர்கள் தங்கள் வேலையைச் செய்ய அனுமதிக்க வேண்டும். வெளிநாட்டு நிதியுதவியில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அது ஏழைகளின் நலனுக்காக தீர்க்கப்பட வேண்டும்." என பெண் ஒருவர் கூறினார்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News