Kathir News
Begin typing your search above and press return to search.

பொதுமக்கள் குறைதீர்ப்பு அதிகாரியாக இந்தியரை நியமனம் செய்த ட்விட்டர்.!

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, இந்தியாவுக்கான பொதுமக்கள் குறைதீர்ப்பு அதிகாரியாக, வினய் பிரகாஷ் என்பவரை ட்விட்டர் நிறுவனம் நியமனம் செய்துள்ளது.

பொதுமக்கள் குறைதீர்ப்பு அதிகாரியாக இந்தியரை நியமனம் செய்த ட்விட்டர்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  12 July 2021 9:25 AM IST

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, இந்தியாவுக்கான பொதுமக்கள் குறைதீர்ப்பு அதிகாரியாக, வினய் பிரகாஷ் என்பவரை ட்விட்டர் நிறுவனம் நியமனம் செய்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள், கடந்த மே மாதம் அமலுக்கு வந்தது. இந்த விதிகளின்படி 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளர்கள் வைத்திருக்கும் சமூக ஊடக நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள ஒருவரை பொதுமக்கள் குறைதீர்ப்பு அதிகாரியாக நியமனம் செய்ய வேண்டும். அதன்படி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்கள் குறைதீர்ப்பு அதிகாரியை நியமித்தது.


ஆனால் ட்விட்டர் நிறுவனம் மட்டும் குறைதீர்ப்பு அதிகாரியை நியமனம் செய்யாமல் இழுத்தடித்து வந்தது. இதனை தொடர்ந்து நீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து புதியதாக குறைதீர்ப்பு அதிகாரியை நியமனம் செய்தது. அதன்படி தர்மேந்திர சாத்தூர் என்பவரை, தற்காலிக குறைதீர்ப்பு அதிகாரியமாக ட்விட்டர் நியமித்தது. ஆனால் அவர் உடனடியாக பதவியை விட்டு விலகினார்.


இதனை தொடர்ந்து அமெரிக்காவை சேர்ந்த ஜெரிமி கெசல் புதியதாக நியமிக்கப்பட்டார். அவர் இந்தியாவை சேராதவர் என்பதால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், இந்தியாவுக்கான பொதுமக்கள் குறைதீர்ப்பு அதிகாரியாக வினய் பிரகாஷ் என்பவரை நியமித்து ட்விட்டர் நிறுவனம் நேற்று அறிவித்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News