Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய நாடாளுமன்றக் குழுவிடம் மன்னிப்புக் கேட்ட ட்விட்டர்.!

இந்திய நாடாளுமன்றக் குழுவிடம் மன்னிப்புக் கேட்ட ட்விட்டர்.!

இந்திய நாடாளுமன்றக் குழுவிடம் மன்னிப்புக் கேட்ட ட்விட்டர்.!
X

Saffron MomBy : Saffron Mom

  |  19 Nov 2020 12:40 PM IST

வருகின்ற தகவல்களின்படி, ட்விட்டர் சமூக ஊடகத்தில் இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதியாக ஜியோ-டேகில் காண்பித்ததற்காக, ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்த ஜியோ டேக் விவகாரத்தில் எழுத்துப்பூர்வமாக ட்விட்டர் மன்னிப்பு அளித்துள்ளதாகவும், நவம்பர் 30ல் இந்த புவிக் குறியீட்டு (geo tag) சிக்கலை சரி செய்வதாக உறுதி அளித்துள்ளதாகவும், நாடாளுமன்ற குழுவின் தலைவரும் பா.ஜ.க தலைவருமான மீனாட்சி லேக்கி தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபரில் சீனாவின் ஒரு பகுதியாக லடாக்கை காட்டியது தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு ட்விட்டருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த செயல் தேச துரோகம் என்றும் பிரமாணப் பத்திரத்தில் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு முன்பாக, ட்விட்டர் இந்தியாவின் பிரதிநிதிகள் மீனாட்சியை லேகியை சந்தித்து ட்விட்டர் இந்தியா சார்பாக மன்னிப்புக் கோரினர் என்றாலும், இந்தச் செயல் நாட்டின் இறையாண்மையை கேள்விக்கு உள்ளாக்கிய ஒரு குற்றம் ஆகும் என்பதால் அவர்களின் மன்னிப்பு மறுக்கப்பட்டது.

ட்விட்டர் இந்தியாவின் மேல் நிறுவனமான ட்விட்டர் இன்க் நிறுவனத்திடம் இந்த விவகாரத்தில் குறித்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டது. இதன் பிறகு, லடாக், சீனாவில் உள்ளது என்று காட்டப்பட்டதற்கான மன்னிப்பை பிரமாண பத்திரத்தில் ட்விட்டர் கோரியுள்ளது என்று விளக்கி கூறினார்.

அக்டோபரில் ட்விட்டர் லைவ் சேவையின் பொழுது தனது இருப்பிடம் சீனா என்று காட்டுவதாக, பாதுகாப்பு நிபுணர் நிதின் கோகலே காண்பிப்பதாக கவனித்தார். அதேநேரத்தில் யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் அவர் நின்று கொண்டிருந்தார்.

இந்த விவகாரத்தை அறிந்து கொண்ட இந்திய அரசு அக்டோபர் 22ல் ட்விட்டருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த தவறான புரிதலை சரி செய்யுமாறு எச்சரித்தது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அப்பொழுது ஒரு கடிதம் அனுப்பி இந்நிகழ்வு தொடர்பாக நாட்டின் இறையாண்மையை மதிக்குமாறு ட்விட்டரை கேட்டுக்கொண்டது. ட்விட்டர் இதை வெறும் தொழில்நுட்ப பிரச்சனை என்று தீர்த்துக்கொண்டது. மன்னிப்பு கோரிய பிரமாணப் பத்திரத்தில், ஜியோ டேக் ஒரு சாப்ட்வேர் பிழையின் காரணமாக ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

எனவே கடந்த சில வாரங்களில் இந்த ஜியோ டேக் சிக்கலை தீர்ப்பதற்கு நாங்கள் பணியாற்றி உள்ளோம். இனிமேல் அது அந்த நகரத்தின் பெயர், மாநிலம் ஆகியவற்றைத் துல்லியமாக காண்பிக்கும். இதுதவிர ஜம்மு-காஷ்மீரில் உள்ள பல்வேறு நகரங்களுக்கான ஜியோ டேக்கை நாங்கள் ஆய்வு செய்கிறோம். இந்த பணி ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிறது, நவம்பர் 30ல் இவை முடிக்கப்படும் என்று மேலும் கூறியத.

இதற்கு முன்னர் இந்தியாவின் பிரதிநிதிகளை இந்திய நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் விசாரித்தனர். இதுகுறித்து டுவிட்டர் அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை என்று இந்த குழு கருதியதாக லேகி கூறினார். இந்நிலையில் ட்விட்டர் அதிகாரபூர்வமாக பிரமாணத்தின் மூலம் மன்னிப்பு கோரியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News