போலீசிடம் பாதுகாப்பு கேட்ட உதய்பூர் டெய்லர் - காவல்துறை அலட்சியப்படுத்தியதா?
By : Thangavelu
நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பா.ஜ.க. முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா பேசியிருந்தார். அதனை ஆதரித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட ராஜஸ்தானை சேர்ந்த டைலர் கடைக்காரர் கன்னையா லால் என்பவரை இஸ்லாமிய கும்பல் தலை துண்டித்து படுகொலை செய்தது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொலையாளிகள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கோஷங்களை இந்துக்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட கன்னையா லால் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் போலீசாரிடம் தனக்கு பாதுகாப்பு வழங்கும்படி கோரிக்கை வைத்துள்ளார். அதன் தகவல்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னையா லால் நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். அதற்காக கடந்த ஜூன் 11ம் தேதி கன்னையா லால் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கிடையில் அவருக்கு இஸ்லாமிய கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இது பற்றி கன்னையா லால் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். அந்த புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது: என்னுடைய மகன் செல்போனில் கேம் விளையாடியிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளப் பதிவை தவறுதலாக அனுப்பியதாக கூறப்படுகிறது. இதற்காக இரண்டு நாட்களுக்கு பின்னர் 2 பேர் என்னிடம் வந்து செல்போனை பறிக்க முற்பட்டனர். அது மட்டுமின்றி அந்த இரண்டு பேரும் எனது கடையின் அருகாமையில் பதுங்கியிருந்து கடையை திறக்கவிடால் தடுத்தனர். எனவே அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது கடையை திறக்க உதவுங்கள் எனவும் கூறியுள்ளார். தற்போது இந்த புகார் கடிதம் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Source, Image Courtesy: Maalaimalar