உக்ரைன் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா தயார் - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு!
உக்ரைன் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா உதவ தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்து இருக்கிறார்.
By : Bharathi Latha
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் முதல் முறையாக நியூசிலாந்து பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்கு அவர் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தாவை சந்தித்து பேசினார். பின்னர் இங்கிலாந்து வர்த்தக மன்ற தலைவர் தலைமை செயல் அதிகாரியிடம் விரிவான பேச்சு வார்த்தை நடத்தினார். அப்பொழுது உக்ரைன் பிரச்சனைக்கு தீர்வு காண தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் இந்தியா செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில், என்னை பொறுத்தவரை உக்ரைன் நாட்டின் நிர்வாகத்தில் உலகின் பண்முக தன்மைகள் இயற்கையாகவே வித்தியாசமான பதிலுக்கு வழிவகுக்கும்.
ஏனெனில் அவர்களின் பல அச்சுறுத்தல் உணர்வுகள், பதற்றம் அவர்களின் நலன் ஆகியவற்றில் வருகையை நான் காண்கிறேன். இந்த சூழலில் இந்தியா என்ன செய்ய வேண்டும்? என்பதை நான் பார்த்தேன். வெளிப்படையாக அது இந்திய நலனுக்காக, ஆனால் உலகில் சிறந்த நலனுக்காக இருக்கும் நான் ஐநாவில் இருந்தபோது உக்ரைனில் அணு உலை பாதுகாப்பு குறித்து மிகப்பெரிய கவலை இருந்தது. எனில் இந்த உலைக்கு அருகே இப்பொழுது தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த அணுகுலையின் பாதுகாப்பு தொடர்பாக ரஷ்யாவிடம் பேச விஎன்னிடம் பலர் கோரிக்கை வைத்தனர். அதை நாங்கள் செய்வோம்.
அதுமட்டுமின்றி ஒற்றுமை தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நாடுகளில் மற்றும் ஐ.நாவில் கூட எங்களுடன் நாங்கள் கவலைகளை பகிர்ந்து கொண்டனர், அதை ரஷ்யாவிடம் எடுத்துக் கூறினோம். உக்ரைன் பிரச்சனைக்கு தீர்வுக்காக எங்களால் என்ன செய்ய முடியுமோ? அதை செய்ய எப்பொழுதும் தயாராகவே இருக்கிறோம். நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்து எங்கள் கருத்துக்களை தெரிவித்தால் பிற நாடுகள் அதை புறக்கணிக்கும் என்று நான் நினைக்கவில்லை. மேலும் எங்கள் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி புதிருக்கு இடையே சந்திப்பில், ஹாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் நாங்கள் இதை கண்டோம்.
Input & Image courtesy:Times of India