உக்ரைனிலலிருந்து திரும்பிய இந்திய மாணவர்களுக்கு உதவ இணைத்தளம்!
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு உதவ இணையதளம் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் யோசனை.
By : Bharathi Latha
உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் படிப்பு தொடர்பாக பஞ்சாப்பை சேர்ந்த ஏழு மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்கள். இந்த மனுவை நீதிபதி குப்தா தலைமையிலான அமர்வுக்கு வருகிறது. இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் இருந்து திரும்பிய மாணவர்கள் மருத்துவக் கல்வியை இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தொடர இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் இடமில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே முதன்மையான மருத்துவ பல்கலைக்கழகங்களில் சேர அனுமதித்தால் பல்வேறு வழக்குகள் நாட்டில் ஏற்படும் என்றும் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று மீண்டும் விசாரித்து இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மாணவர்களை போரில் பாதிக்கப்பட்டவர்களாக அறிவிக்க வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த மாணவி ஒருவர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார். மத்திய அரசின் சார்பில் வாதிட்ட ஜெனரல் மேத்தா வாதாடுகையில், உள்ளுறை மருத்துவ பயிற்சி மேற்கொள்ள முடியாத மாணவர்கள் இந்தியாவில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
முதலாம் ஆண்டு இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பக்கிலும் மாணவர்களை பிற நாடுகளுக்கு அனுப்பி படிக்க வைத்து மருத்துவ பட்டத்தை உக்ரைனில் இருந்து பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் ஒருங்கிணைப்பு ஏற்பட பிரத்யேக இணையதளத்தை உருவாக்கி வெளிப்படை தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசிற்கு நீதிமன்றம் சார்பில் யோசனை வழங்கப்பட்டுள்ளது.
Input & Image courtesy: News