பிரதமர் மோடியால் உயிருடன் திரும்பினேன்: உக்ரைனில் இருந்து திரும்பிய திருப்பூர் மாணவர் பேட்டி!
By : Thangavelu
பிரதமர் மோடியின் முயற்சியால் உயிருடன் திரும்பி வந்துள்ளதாக திருப்பூர் மாணவர் ஸ்ரீதர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி. இவர் ஒரு கட்டிட காண்டிராக்டராக பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி திபா, இவர்களின் இரண்டாவது மகன் ஸ்ரீதர் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வந்தார்.
இதற்கிடையில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வந்த தாக்குதலால் அங்கிருந்து பாதுகாப்புடன் ஸ்ரீதரை மத்திய அரசு மீட்டு வந்துள்ளது. அதன்படி திருப்பூருக்கு வந்த ஸ்ரீதர் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது; நான் உக்ரைனில் உள்ள மருத்துவக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்துள்ளேன். இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதாக அறிவிப்பு வெளியானது. அப்போது கடந்த மாதம் 2ம் தேதி இந்தியா வருவதற்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன். இதனிடையே கீவ் நகரத்தின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியால் அனைத்து சேவைகளும் தடைப்பட்டது.
இதன் பின்னர் தனது பெற்றோர் தன்னிடம் பேசும்போது பாதுகாப்பாக இருக்க கூறினர். அதன்படி நானும் பாதுகாப்ப இருந்தேன். இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தன்னை பாதுகாப்புடன் மீட்டனர் என்றார். மேலும், பிரதமர் மோடியின் முயற்சியால் நான் இந்தியாவுக்கு உயிருடன் திரும்பியுள்ளேன். இதற்கு நான் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
Source, Image Courtesy: Maalaimalar