ஐ.நா பொது செயலாளர் இந்தியா வருகை: காரணம் இதுதான்!
மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய நாட்டு பொதுச் செயலாளர் இந்திய வருகை.
By : Bharathi Latha
ஐக்கிய நாட்டு சபையின் பொது செயலாளர் ஆக ஆண்டனியோ மூன்று நாள் இந்திய சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு மும்பை வந்தார். மும்பை விமான நிலையத்தில் அவருக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பை அளித்தார்கள். இந்நிலையில் நேற்று 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளான மும்பை தாஜ் ஹோட்டலுக்கு சென்றார். அங்கு ஆண்டனியோ பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு மலர் வளையும் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது உலகளாவிய முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
மக்கள் ஒற்றுமையாக இருக்க கலாச்சாரங்களின் பன்முகத்தன்மை மற்றும் தலைமை அதிகரிக்க வேண்டும் பயங்கரவாதம் என்பது முழுமையான தீமையாகும். இன்றைய உலகம் உலகில் அதற்கு இடமில்லை எந்த காரணத்தினாலும் எந்த ஒரு சம்பவத்திலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது. ஐ.நாவின் பொது செயலாளர் ஆக பொறுப்பேற்று பிறகு நான் செய்த முதல் செயலில் ஒன்று, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகளில் ஒத்துழைப்புக்காகவும், வழி காட்டவும் மற்றும் அதற்கான தயார்படுத்தவும் பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகத்தை நிறுவியதுதான். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடைபெற்ற பயங்கரமாக தாக்குதல் வரலாற்றில் மிகவும் காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஒன்றாகும்.
இத்தாக்குதலில் பலியான 166 பேர்கள் நம் உலகின் ஹீரோக்கள். அவர்களின் குடும்பத்தினர் நண்பர்களும் எனது ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிங் பயங்கரவாத எதிர்ப்புக் குழு அடுத்த வாரம் இந்தியாவில் இரண்டு நாள் ஆலோசனை நடத்த இருக்கும் நிலையில், ஐ.நா பொதுச் செயலாளர் இந்தியா வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குஜராத்திற்கு செல்லும் அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News