மோடி நிர்வாகத்தில் பெண்கள் கண்ணியத்துடன் பணியாற்றும் சூழல் - மத்திய அமைச்சர் பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நிர்வாகத்தின் கீழ் பெண்கள் கண்ணியத்துடன் பணியாற்றும் சூழ்நிலை உருவாகி இருப்பதாக மத்திய அமைச்சர் கூறி இருக்கிறார்.
By : Bharathi Latha
பிரதமர் மோடியின் நிர்வாக சீர்திருத்தங்களின் கீழ் பெண்கள் கண்ணியத்துடனும், சுய மரியாதையுடனும் பணியாற்றுவதற்கான சூழலை உருவாக்கியுள்ளதாக மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்தா் சிங் நேற்று ஆசிரியர் தினமான டெல்லியில் திங்கட்கிழமை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை பெண் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் அமைச்சர் இவ்வாறு பேசியிருக்கிறார். குறிப்பாக மத்திய அரசு பணிகளின் பெண்களின் பங்களிப்பு தற்போது அதிகரித்து வருவதற்கான நடவடிக்கைகளை பணியாளர் நலத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக பெண்கள் அவர்களுடைய பணி மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றியதிலிருந்து பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திருக்கிறார். பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலமாக அளிக்கப்படும் பயிற்சி பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் சுயசார்பு, சுயமரியாதை ஆகியவற்றை உருவாக்கி தந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் அவர்களின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் பல்வேறு பெண்கள் தொழில் முனைவோர்களாக உருவாக்கி இருக்கிறார்கள் என்பது பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். கடந்த எட்டு ஆண்டுகளில் பிரதமர் மோடி நிர்வாகத்தின் மூலம் பெண்களின் பணிச்சூழலில் எளிதாக இருப்பதாகவும் அவர்கள் உயர் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் பணியாற்றுவதற்கான பெரிய சமூக சீர்திருத்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டு உள்ளார்.
Input & Image courtesy: News