Kathir News
Begin typing your search above and press return to search.

ஐ.நா கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை முன் வைத்த பாகிஸ்தான் - இந்தியா கண்டனம்!

ஐக்கிய நாட்டு பொது சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பி பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐ.நா கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை முன் வைத்த பாகிஸ்தான் - இந்தியா கண்டனம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 Oct 2022 2:32 AM GMT

உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாட்டு பொது சபையின் அவசரகால சிறப்பு கூட்டம் நடந்தது. அதில் உக்கரை நாட்டின் சில பிராந்தியங்கள் மற்றும் ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டதற்கு ரஷ்யாவின் சட்டவிரத வாக்கெடுப்புக்கும் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஐ.நாவுக்கான பாகிஸ்தான் தூதர் முன் முனீர் அக்ரம் ரஷ்ய பிரச்சனைகளை காஷ்மீர் பிரச்சினையுடன் ஒப்பிட்டு பேசினார்.


காஷ்மீரை போல வெளிநாட்டு ஆக்கிரமிப்புகள் இருப்பவர்களுக்கும் தங்கள் சுய நிர்ணய உரிமைகளை பயன்படுத்துபவர்களுக்கும் சுயநிர்ணமி உரிமை பொருந்தும் என்று அவர் கூறியுள்ளார். இதை எடுத்து பாகிஸ்தானில் பாகிஸ்தானின் எந்த ஒரு நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அதே சமயத்தில் ஐ.நாவிற்கு இந்திய தூதர் ருத்ரா பேசுகையில், ஐ.நா சபை ஒரு குழு மீண்டும் ஒரு தடவை தவறாக பயன்படுத்திய தனது நாட்டுக்கு எதிரான அற்பத்தனமான கருத்துக்களை கூறியிருப்பதை நாம் அனைவரும் பார்த்தோம்.


இது ஆச்சரியம் அளிக்கவில்லை. இதற்கு கருத்துக்கள் சர்வதேச சமூகத்தின் கூட்டு கண்டனத்திற்கு உகந்தவை. திரும்பத், திரும்ப பொய் கூறும் மனப்பாங்குடன் பேசுவதை பார்த்து அழுப்பு ஏற்படுகிறது. ஒட்டுமொத்த காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது. இனி எப்பொழுதும் இருக்கும் பாகிஸ்தான் பிரதிநிதிக்கு நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதுதான் உண்மை. முதலில் பாகிஸ்தான் தனது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் குடிமக்கள் வாழும் உரிமைகளையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பார்கள் என்று கூறி இருக்கிறார்.

Input & Image courtesy: Hindu News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News