கோவிட் ஐ எதிர்த்து சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த 23,123 கோடி தொகுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!
வியாழக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 2021-2022 நிதியாண்டில் 23,123 கோடி மதிப்புள்ள "இந்தியா கொரோனா அவசரக்கால பதில் மற்றும் சுகாதார அமைப்பு தயாரிப்பதற்கான தொகுப்பு: கட்டம் 2" என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
By : Janani
வியாழக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 2021-2022 நிதியாண்டில் 23,123 கோடி மதிப்புள்ள "இந்தியா கொரோனா அவசரக்கால பதில் மற்றும் சுகாதார அமைப்பு தயாரிப்பதற்கான தொகுப்பு: கட்டம் 2" என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
குழந்தைகள் பராமரிப்பு மற்றும் அதன் விளைவுகள் குறித்த சுகாதார உள்கட்டமைப்புகள் மேம்பாடு மற்றும் ஆரம்ப கண்டறிதல் மற்றும் உடனடி பதிலளிப்பதற்காகச் சுகாதார அமைப்புகளின் தயார்நிலையைச் சரி சரிபார்ப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த தொகுப்பின் இரண்டாம் கட்டத்தில் மத்திய துறை மற்றும் மத்திய நிதியுதவி திட்டங்களின் கூறுகள் உள்ளது என்றும் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தொகுப்பின் ஒரு பகுதியாக, மத்திய மருத்துவமனைகள், AIIMS மற்றும் பிற நிறுவனங்களுக்கு கொரோனா நிர்வாகத்திற்காக 6,688 படுகைகளை மறுசீரமைப்பதற்கான ஆதரவுகளை வழங்கும்.
மேலும், DoHFW யில் மத்திய போர் அறைகளை வலுப்படுத்துவது, கோவின் இணையதளத்தை வலுப்படுத்துவது, கொரோனா போர்டலை வலுப்படுத்துவது போன்ற தகவல் தலையீடுகளுக்கும் ஆதரவு வழங்கப்படும்.
இந்த தொகுப்பின் கீழ் சுமார் 2.4 லட்சம் மருத்துவ படுக்கைகள், 20,000 ICU படுக்கைகள் போன்றவை சிறப்புக் கவனம் செலுத்தி உருவாக்கப்படும், ஏனெனில் இது 20 சதவீதம் ICU படுக்கைகள் குழந்தைகள் பராமரிப்புக்கு இருக்கும்.
இந்த புதிய தொகுப்பின் கீழ். மத்திய அரசு 15,000 கோடியும் மற்றும் மாநிலம் 8,123 கோடியும் வழங்கும். மேலும் ஆரம்பச் சுகாதார மையங்களில் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் அனைத்து 736 மாவட்டங்களிலும் கூட்டாகச் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் மாவட்டங்கள் அளவில் ஆக்சிஜென் மற்றும் மருந்துகளைச் சேமிப்பதற்கான வசதியும் உருவாக்கப்படும்.
source: https://swarajyamag.com/news-brief/pm-modi-led-cabinet-approves-rs-23123-crore-package-to-improve-health-infrastructure-to-combat-covid