Kathir News
Begin typing your search above and press return to search.

யெஸ் வங்கி சீரமைப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறிய தகவல்கள்.!

யெஸ் வங்கி சீரமைப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறிய தகவல்கள்.!

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  10 Dec 2020 2:14 PM GMT

பிரபல தனியார் வங்கியான 'யெஸ் வங்கி' வாராக் கடன் அதிகரிப்பு மற்றும் பலவேறு நிதி முறைகேடுகளால் நிதிச் சுமையில் சிக்கித் தவித்து வந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக சென்ற மார்ச் மாதமே தகவல்கள் வெளியாகின.

வாராக் கடன்களின் அளவு மிக அதிக அளவு சென்றதால் அந்த வங்கியின் நிதி நிலைமை பாதாளத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் அதனை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறினார். அதன்படி அதனை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

அதில் இருந்து யெஸ் வங்கி எந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது என்றும் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுப்பதில் கட்டுப்பாடுகளை மேற்கொண்டது ரிசர்வ் வங்கி. மேலும் முதலீட்டாளர்கள் பயப்பட தேவை இல்லை என்றும், வங்கியை நிச்சயம் சீரமைப்போம் என்றும் நிர்மலா சீத்தாராமன் கூறினார், பல நடவடிக்கைகளை எடுத்தார்.

இந்நிலையில், யெஸ் வங்கியைச் சீரமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது, நிதிச்சிக்கலில் இருக்கும் யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை எஸ்பிஐ வங்கி எடுத்துக்கொண்டுள்ளது.

அனைத்து முதலீட்டாளர்களுக்கும்ம் 3 ஆண்டுகள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும், வங்கியின் கடன் வழங்கும் திறன் ரூ.1200 கோடியிலிருந்து ரூ.6,200 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் நிர்மலா சீத்தாராமன் கூறினார்.

மேலும் இதற்காக எஸ்பிஐ வங்கி ரூ.7,250 கோடியை முதலீடு செய்ய உள்ளது என்றும், யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை எஸ்பிஐ வங்கி எடுத்துக்கொண்டுள்ளது. அனைத்து முதலீட்டாளர்களுக்கும்ம் 3 ஆண்டுகள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News