Kathir News
Begin typing your search above and press return to search.

ரூ.234.68 கோடி மதிப்பிலான 7 உணவு பதப்படுத்தும் திட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ரூ.234.68 கோடி மதிப்பிலான 7 உணவு பதப்படுத்தும் திட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ரூ.234.68 கோடி மதிப்பிலான 7 உணவு பதப்படுத்தும் திட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Muruganandham MBy : Muruganandham M

  |  26 Nov 2020 11:40 AM GMT

ரூ.234.68 கோடி மதிப்பிலான 7 உணவு பதப்படுத்தும் திட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் கிஷான் சம்பதா திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் வேளாண் பொருட்கள் பதப்படுத்துதல் கட்டமைப்பு உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபடுபவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் 7 உணவு பதப்படுத்தும் திட்டங்களுக்கு ஐஎம்ஏசி ஒப்புதல் அளித்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.234.68 கோடி. இதில் ரூ.60.87 கோடி அளவுக்கு மானியம் அளிக்கப்படவுள்ளது. மேகாலயா, குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இத்திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. இவற்றின் மூலம் 7750 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

40 சதவீத மக்கள் வேளாண் மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் நிலையில் உணவு பதப்படுத்துதலின் வளர்ச்சி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் நன்மைகளை ஏற்படுத்தும். உணவு பதப்படுத்தும் குழுக்களை ஊக்குவித்தல், உணவுப் பூங்காக்கள் ஏற்படுத்துதல், தொழில் முனைவோர்களை ஊக்குவித்தல், திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்துதல், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை ஆதரித்தல் போன்ற பல்வேறு உத்திகள் விளக்கப்பட்டுள்ளது.

உணவு பதப்படுத்துதல் என்பது வேளாண், பால், கால்நடை, இறைச்சி, கோழி, மீன் ஆகியவற்றின் மூலப்பொருட்கள்இயற்பியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு, விலை மதிப்புமிக்க பொருளாக மனிதர்கள் மற்றும் கால்நடைகள் நுகரும் வகையில் பதப்படுத்துதலாகும். மேலும், உணவுப் பொருட்களின் சேமிப்பு கால நீட்டிப்பு மற்றும் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு பதப்படுத்துதல், உணவு சேர்க்கைகள் மற்றும் உலர்த்துதல் முறையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதும் ஆகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News