ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப துறையில் கவனம் செலுத்தும் மோடி அரசு: இலக்கு நிர்ணயம்!
ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முக்கிய முடிவு மற்றும் அதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
By : Bharathi Latha
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர் சந்திப்பின் போது கூறுகையில், 2022 செப்டம்பரில் நடைபெற்ற மத்திய-மாநில அறிவியல் மாநாட்டிலும், இந்த விடுதலைப் பெருவிழாவின் 75 ஆவது ஆண்டு கால கட்டத்தில் இந்தியாவை உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக மாற்ற, ஒரே நேரத்தில் பல முனைகளில் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்ததை டாக்டர் ஜிதேந்திர சிங் நினைவு கூர்ந்தார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிகளை உள்ளூர் மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய துறைகள் 2023 ஆம் ஆண்டில் தாங்கள் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் மற்றும் முக்கியமாகப் பணி செய்ய வேண்டிய பகுதிகளை ஏற்கெனவே அடையாளம் கண்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையில் விண்வெளித் துறையை தனியார் பங்கேற்பாளர்களுக்கு அனுமதித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, இன்று குறுகிய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களைக் கொண்டதாக மாறி உள்ளது என அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், அறிவியல் ஆய்வுப் பணிகள், தொழில்நுட்பப் பணிகள் மற்றும் சந்திரனின் மேற்பரப்பில் ஒரு இந்தியரை தரையிறக்கும் மனித விண்வெளிப் பயணத் திட்டமான "ககன்யான்" ஆகியவற்றில் இஸ்ரோ கவனம் செலுத்துகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பயோடெக்னாலஜி எனப்படும் உயிரி தொழில்நுட்பத் துறை (DBT) தற்போதுள்ள மற்றும் இனி வரக் கூடிய நோய்களுக்கான தடுப்பூசிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார். சர்வதேச சிறுதானிய ஆண்டில் சிறுதானியப் பயிர்கள் மற்றும் தாவர வைரஸ்களின் நோய் மரபணுவியல் பற்றிய முக்கிய பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
Input & Image courtesy: PIB