Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவிற்கு எதிராக விஷமத்தை பரப்பும் ட்விட்டர்! "கூ" செயலிக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!

இந்தியாவிற்கு எதிராக விஷமத்தை பரப்பும் ட்விட்டர்! "கூ" செயலிக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!

இந்தியாவிற்கு எதிராக விஷமத்தை பரப்பும் ட்விட்டர்! கூ செயலிக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!

Muruganandham MBy : Muruganandham M

  |  12 Feb 2021 7:00 AM GMT

ட்விட்டருடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், வியாழக்கிழமை மாநிலங்களவையில் இந்தியா தயாரித்த அனலாக் செயலியான 'கூ'வைப் பாராட்டினார்.

"கூ என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலியாகும். இது இன்று வெற்றிக்கான தயாரிப்பாக மாறியுள்ளது. அதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். இந்தியர்கள் பல பல தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தலைமை தாங்குகிறார்கள் என்பது எனக்கு பெருமை அளிக்கிறது என்று பிரசாத் கேள்வி நேரத்தின் போது கூறினார்.

'வெறுக்கத்தக்க' உள்ளடக்கத்தை பரப்ப அனுமதிக்கும் சமூக ஊடக தளங்களுக்கு எதிராக மத்திய அமைச்சர் மேலும் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார். மேலும் அவர்களின் "இரட்டைத் தரம்" இந்தியாவில் அனுமதிக்கப்படாது என்றும் கூறினார்.

ட்ரம்ப் சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் அமெரிக்க கேபிடல் ஹில் தாக்கப்பட்டபோது, ட்விட்டர் மற்றும் பேஸ்புக் ஆகியவை விசாரணையை ஆதரித்தன. ஆனால் புதுதில்லியில் செங்கோட்டை தாக்கப்பட்ட போது சமூக ஊடக தளங்கள் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக நின்றிருக்கிறார்கள்.

"நாங்கள் இப்போது ட்விட்டரை வரம்பின் கீழ் கொண்டு வந்துள்ளோம். யு.எஸ். கேபிடல் ஹில்லில் வன்முறை ஏற்படும் போது, சமூக ஊடக தளங்கள் காவல்துறை விசாரணையை ஊக்குவிக்கின்றன. ஆனால் செங்கோட்டை சம்பவத்தில் அதே தளங்கள் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக செல்வது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைச்சர் கூறினார்.

செங்கோட்டை நமது பெருமையின் சின்னம். இந்த இரட்டைத் தரத்தை நாங்கள் நாட்டில் அனுமதிக்க மாட்டோம். இது என்ன நியாயம்? நீங்கள் இனப்படுகொலையை விரும்புகிறீர்களா? "என்று அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News