Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் கருத்தரிப்பு விகிதம் குறைய வாய்ப்பு! குடும்பக்கட்டுப்பாட்டின் புள்ளி விவரங்களை முன்வைத்த மத்திய அமைச்சர்!

இந்தியாவில் கருத்தரிப்பு விகிதம் குறைய வாய்ப்பு! குடும்பக்கட்டுப்பாட்டின் புள்ளி விவரங்களை முன்வைத்த மத்திய அமைச்சர்!

இந்தியாவில் கருத்தரிப்பு விகிதம் குறைய வாய்ப்பு! குடும்பக்கட்டுப்பாட்டின் புள்ளி விவரங்களை முன்வைத்த மத்திய அமைச்சர்!

Muruganandham MBy : Muruganandham M

  |  23 Feb 2021 7:45 AM GMT

இந்தியா போன்ற இளம்வயதினர் அதிகம் வாழும் நாட்டின் உயர் விருப்பங்களை மனதில் கொண்டு, நவீன கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். புதுமை சிந்தனை படைப்புகளை ஊக்குவிக்க வேண்டும், கல்வி மற்றும் தொழில் திறன்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கச் செய்ய, தொழில்நுட்ப வசதிகளை அதிகம் பயன்படுத்த வேண்டும். இவை வெற்றியடைய மக்கள் தொகை விகிதாச்சாரமும் முக்கிய பங்கு வகிக்கிறது.

வியான் மற்றும் ஜீ ஊடகத்தின் மக்கள்தொகைக்கு எதிரான கோள் என்ற ஓராண்டு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற ‘மக்கள்தொகைக்கு எதிரான கோள்’ என்ற தலைப்பிலான மாநாட்டில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு வளங்களின் தேவையும் அதிகரிக்கும், மக்கள் தொகை பெருகிவரும் நிலையில், பூமியின் வளங்கள் குறைகின்றன. மக்கள் தொகை பெருக்கம் இந்த கிரகத்தையும், மனித சமூகத்தையும் பல்வேறு வழிகளில் பெரிதும் பாதிக்கின்றது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் ஏற்படும் தாக்கத்தை இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் வசிக்கும் மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்”, என்று கூறினார்.

குடும்ப கட்டுப்பாடை ஊக்கப்படுத்துவதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் விரிவான நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், தேசிய குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை உலகளவில் முதல் நாடாக இந்தியா கடந்த 1952-ஆம் ஆண்டு கொண்டு வந்ததை நினைவுகூர்ந்தார். “கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட இந்தியா மற்றும் மாநிலங்களுக்கான மக்கள் தொகை மதிப்பீடுகள் 2011-2036-ன்படி 2011-15ல் 2.37 ஆக இருந்த மொத்த கருத்தரிப்பு வீதம் 2031-35ல் 1.73 ஆகக் குறையும்”, என்று அவர் தெரிவித்தார்.

தற்சார்பு இந்தியா, அதிகாரம் வழங்கப்பட்ட இளைஞர்களின் வலுவான தோள்களின் மீது இயங்கும் என்றும், தேசிய கல்வி கொள்கை, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கொள்கை, ஸ்டார்ட் அப் இந்தியா, ஃபிட் இந்தியா போன்ற திட்டங்களும், கொள்கைகளும் உலகின் குருவாக இந்தியா உயர்வதற்கு ஏதுவாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியா இளம்பருவ உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் விழிப்புணர்வை பரப்புவதிலும், குடும்பக் கட்டுப்பாடு நுட்பங்களை பின்பற்றுவதை மேம்படுத்துவதிலும், அதன் குடிமக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்வதிலும் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை 1951 ல் 36 கோடியிலிருந்து 2011 ல் 121.02 கோடியாக உயர்ந்துள்ள போதிலும், நாடு கருவுறுதல் மற்றும் இறப்பு இரண்டிலும் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டது; 1951 ஆம் ஆண்டில் 1000 க்கு 40.8 ஆக பதிவு செய்யப்பட்ட பிறப்பு விகிதம், 2018 இல் 20 ஆக குறைந்துள்ளது; மொத்த கருவுறுதல் வீதம் (டிஎஃப்ஆர்) 1951 இல் 6.0 லிருந்து 2015-16ல் 2.2 ஆக குறைந்துள்ளது; இந்தியாவில் இறப்பு விகிதம் 2012 ல் 7 ல் இருந்து 2018 ல் 6.2 ஆக குறைந்துள்ளது.

மத்திய அரசு மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக, 14.2 கோடி பயனாளிகளுக்கு நவீன கருத்தடை அணுகலை இந்தியா வழங்க முடிந்தது, இதனால் 5.6 கோடி திட்டமிடப்படாத கர்ப்பங்கள், 18.6 லட்சம் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு மற்றும் 30 ஆயிரம் தாய் இறப்புகள் ஆகியவற்றை 2019 இல் தவிர்க்க முடிந்தது.

15-24 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 2011 ல் 233 மில்லியனிலிருந்து 2036 இல் 227 மில்லியனாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், உழைக்கும் வயது மக்கள்தொகையின் விகிதம் 2011 ல் 61% ஆக இருந்து 2036 இல் 65% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News