போராட்டத்தை கைவிட வேண்டும்.. விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு.!
போராட்டத்தை கைவிட வேண்டும்.. விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு.!

போராட்டத்தைக் கைவிட்டுவிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி விவசாயிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டிராக்டரில் அணி அணியாக டெல்லியை நோக்கிச் சென்று கொண்டுள்ளனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு விட்டுத் தங்கள் கோரிக்கை குறித்துப் பேச்சு நடத்தவர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் ஒரு விவசாயி மகன் என்ற முறையில் பேச்சு நடத்த அழைப்பதாகவும், அரசு ஒருபோதும் விவசாயிகளை ஏமாற்றாது என்றும் ராஜ்நாத் தெரிவித்தார். வேளாண்துறைச் சீர்த்திருத்தங்கள் விவசாயிகள் அதிக வருவாய் ஈட்ட வழிவகுக்கும் என்றும், இதன் பயன்கள் அடுத்த 5 ஆண்டுகளில் தெரியவரும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே விவசாயிகள் டிராக்டர்கள் மூலமாக டெல்லியை நோக்கி செல்வதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டு வருகிறது. தங்களுக்கு நன்மை பயக்கும் திட்டம் என்று விரைவில் விவசாயிகள் உணர்வார்கள் என பாஜகவினர் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.