பரபரப்பு! இந்து மதத்திற்கு மாறிய முஸ்லீம் குடும்பத்தினரை உயிரோடு எரிக்க முயன்ற கொடூர கும்பல்!
பரபரப்பு! இந்து மதத்திற்கு மாறிய முஸ்லீம் குடும்பத்தினரை உயிரோடு எரிக்க முயன்ற கொடூர கும்பல்!
By : Saffron Mom
சனிக்கிழமை உத்தரப் பிரதேசம் ராய் பரேலி பகுதியில், மூன்று மாதங்களுக்கு முன்பு இந்து மதத்திற்கு மாறிய முஸ்லீம் மனிதரின் குடும்பத்தை உயிரோடு எரிக்க முயன்றுள்ளனர். அறிக்கையின் படி, சனிக்கிழமை இரவு சில நபர்கள் அந்த நபரின் வீட்டிற்கு முன்வந்து மற்றும் குடும்பத்தினரை வீட்டிற்குள் வைத்து பூட்டிவவிட்டு தீவைத்தனர். இருப்பினும் அந்த குடும்பத்தினர் குழந்தைகளுடன் உயிர் தப்பினர்.
சம்பவம் குறித்து அறிந்தவுடன், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். கிராம தலைவர் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த கிராமத்தில் வசிக்கும் முகமத் அன்வர் என்னும் நபர் மூன்று மாதங்களுக்கு முன்பு இந்து மதத்திற்கு மாறியுள்ளார். மேலும் அவர் தன் பெயரை தேவ் பிரகாஷ் படேல் என்றும் தன் குழந்தைகளின் பெயரை தேவநாத், தீண்டாயல் மற்றும் துர்கா தேவி என்று மாற்றினார். செப்டம்பர் 2020 இல் இந்து மதத்திற்கு முறைப்படி சடங்குகளுடன் மாறியுள்ளார்.
சனிக்கிழமை மதியம் 2.30 அளவில் சில நபர்கள் அவரின் வீட்டின் முன் வந்து அவர் மற்றும் அவரது குழந்தைகளை வீட்டிற்குள் வைத்துப் பூட்டியுள்ளனர். பின்னர் அவர்கள் தீ வைத்து அந்த குடும்பத்தை உயிரோடு எரிக்க முயன்றுள்ளனர். பின்னர் படேல் எழுந்து தீ வைத்திருப்பதை உணர்ந்து வெளியே செல்ல முயன்றுள்ளார். பின்னர் தன் குழந்தைகளுடன் ஒரு வழியாக பின் கதவு வழியாக வெளியே சென்றார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்து காவல்துறை அந்த பகுதிக்கு விரைந்தது. இந்து அமைப்புகளும் அந்த பகுதிக்கு விரைந்து கோபத்தை வெளிப்படுத்தியது. தங்களை தீ வைத்து எரிக்க முயன்றதுக்காகக் கிராம தலைவர் தாஹிர், திவாரிக்க சிங், ரெஹான், அலி அஹமத், இம்தியாஸ் போன்றவர்கள் மீது குற்றம் சாட்டினார். குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச முதல்வரின் செய்தி தொடர்பாளர் ஷலப் மணி திரிபாதி கூறிய படி, கிராம தலைவர் தலைமறைவாக உள்ளார் மீதமுள்ள நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்தார். மேலும் காவல்துறை குற்றவாளியைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.