தீபாவளிக்கு அயோத்தியில் டிஜிட்டல் முறை விளக்கேற்றம் - முதல்வர் யோகி அதிரடி அறிவிப்பு!
தீபாவளிக்கு அயோத்தியில் டிஜிட்டல் முறை விளக்கேற்றம் - முதல்வர் யோகி அதிரடி அறிவிப்பு!

"492 வருடங்கள் காத்திருந்து ராமர் கோவில் கனவு நிறைவேறி உள்ளது, ராம் லாலா மீது நம்பிக்கைவைத்து விளக்கேற்றி மகிழும் நிகழ்வை யாரும் இழக்காமல் இருப்பதை மாநில அரசாங்கம் முயற்சி செய்கின்றது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "உத்தரப் பிரதேச முதல்வரின் உத்தரவின் பெயரில் விளக்குகளை நேரடியாக எரியவைக்க வலைதளம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகின்றது" என்றும் கூறியுள்ளது.
மேலும் அந்த வலைதளத்தில் ராம் லாலா விராஜ்மன் உருவப்பட முன் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்கும். மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு விளக்கினை தேர்ந்தெடுக்கும் வசதியும் வலைதளத்தில் செய்யப்பட்டுள்ளது. விளக்கினை ஏற்றி முடித்த பிறகு பக்தர்களின் விவரங்களைக் கொண்டு அவர்களுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நன்றி தெரிவித்த ஒரு கடிதமும் டிஜிட்டல் முறையில் வரும் அதில் ராம் லாலா புகைப்படம் இருக்கும். அந்த போர்டல் நவம்பர் 13 நிகழவுள்ள முக்கிய நிகழ்வுக்கு முன்னர் பயன்பாட்டிற்கு வரும்.
முதல்வர் யோகி தீபோத்ஸாவத்திற்கான வழிமுறைகளை வெளியிடும்போதும், கொரோனா தொற்று நோயின் வழிமுறைகளை மீறக்கூடாது என்பதையும் அறிவித்தார். மேலும் தீபோத்ஸாவத்தில் அயோத்தி பகுதி வீடுகள் மற்றும் கோவில்களிலும் விளக்கு ஏற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.