Kathir News
Begin typing your search above and press return to search.

ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ஸ்ரீ கோரக்பூர் கோவில் சார்பாக 1.01 கோடி ரூபாய் நிதி வழங்கிய முதல்வர் யோகி!

ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ஸ்ரீ கோரக்பூர் கோவில் சார்பாக 1.01 கோடி ரூபாய் நிதி வழங்கிய முதல்வர் யோகி!

ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ஸ்ரீ கோரக்பூர் கோவில் சார்பாக 1.01 கோடி ரூபாய் நிதி வழங்கிய முதல்வர் யோகி!

Saffron MomBy : Saffron Mom

  |  28 Jan 2021 5:30 PM GMT

`உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜனவரி 27 இல் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு ஸ்ரீ கோரக்ஹ்நாத் கோவில் சார்பாக 1.01 கோடி காசோலையை ஸ்ரீ ராம் ஜென்ம பூமி நிர்மாண் நிதியின் ஒரு பங்காக ஸ்ரீ ராம் ஜென்ம பூமியின் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராயிடம் வழங்கினார். மேலும் கோரக்ஹ்புரில் வசிப்பவர்களும் ராமர் கோவில் கட்டுமானத்திற்கு நிதி வழங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னர் ராமர் கோவில் கட்டுமானத்திற்காகத் தனது சொந்த கணக்கிலிருந்து 2 மற்றும் 11 லட்ச ரூபாயை முதல்வர் யோகி வழங்கினார்.
மேலும் மஹந்த் அவைத்யாநாத் மற்றும் மஹந்த் திக்விஜய் நாத் முதலியோரை ராய் நினைவு கூர்ந்து, "மஹந்த் அவைத்யாநாத் மற்றும் மஹந்த் திக்விஜய் நாத் ஆகியோர் இந்த இயக்கத்தில் தொடர்புடையவர்கள். நான் கோரக்பூருக்கு மஹந்த் அவைத்யாநாத்தை வணங்க வந்தேன். 1984 இல் இருந்தே அவர் இந்த இயக்கத்தில் தொடர்பில் உள்ளார்," என்று தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் தற்போது கோரக்பூரில் சுற்றுலா சென்றுள்ளார். புதன்கிழமை காலை கோரக்பூர் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்குப் பல தொழிலதிபர்கள் நன்கொடையளித்து வருகின்றனர். கோரக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் 5 லட்ச ரூபாயை நன்கொடை அளித்துள்ளார்.
நிர்மன் நிதி மகர சங்கராந்தி அன்று தொடங்கப்பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந் மற்றும் கன்னட நடிகர்கள், சில பாலிவுட் நடிகர்கள் அவரவர்கள் தகுகளிகளுக்கு ஏற்ப நன்கொடை அளித்து வருகின்றனர். பொது மக்கள் நன்கொடை அளிக்கும் பல வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அதில் ஒரு வீடியோவில் வயதான ஏழை பெண்மணி ஒருவர் நிதிக்காக 20 ரூபாய் கொடுக்க முயல்கிறார் ஆனால் VHP தொண்டர்கள் 10 ரூபாய் போதும் என்று தெரிவிக்கின்றனர்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News