இந்தியா மீது தாலிபான்களின் பார்வை பட்டால் அவ்வளவுதான் !வான்வழித் தாக்குதல் மட்டுமே தீர்வு !- என யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை !
தாலிபான்களின் பார்வை இந்தியா மீது பட்டால் அவர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என தாலிபான்களுக்கே நன்றாக தெரியும் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
By : Thangavelu
தாலிபான்களின் பார்வை இந்தியா மீது பட்டால் அவர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என தாலிபான்களுக்கே நன்றாக தெரியும் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் இடைக்கால அரசை நிறுவியுள்ளனர். அவர்களை சீனா, பாகிஸ்தான், அரபு நாடுகளை தவிர மற்ற நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் உலக நாடுகளை எச்சரிக்கும் விதமாக பேசியிருந்தார். எங்களை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை என்றால் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று வெளிப்படையாக பேசியிருந்தார். இந்த பேச்சு உலக நாடுகளிடம் ஒருவிதமான அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் தாலிபான்கள் குறித்து பேசியதாவது: பிரதமர் மோடியின் தலைமையின் நாடு வலிமையடைந்துள்ளது. இந்திய தேசத்தின் மீது எந்த ஒரு நாடும் தாக்குதல் எண்ணத்துடன் பார்க்க முடியாது. இன்றைய சூழலில் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் தாலிபான்களால் தவித்து வருகிறது. ஆனால் இந்தியா மீது ஒரு பார்வை பட்டாலும் அவர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என்று அவர்களுக்கே தெரியும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar