முத்தலாக் சொல்லிவிட்டு கணவர், மைத்துனர் ஆகியோரால் பெண் பலாத்காரம்!
By : Kathir Webdesk
உ.பி மாநிலம் ஷாஜஹான்பூரில் பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் அவரது தம்பியால் முத்தலாக் கூறி பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், முஸ்லிம் மதகுரு உட்பட பலரின் தொடர்பு இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
மொத்தம் 6 பேரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த பெண் அளித்த புகாரின்படி, அவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சல்மான் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். சல்மான் சில மாதங்களுக்கு முன்பு முத்தலாக் முறையின் கீழ் விவாகரத்து செய்தார். இது சட்டவிரோதமானது.
குட்டு ஹாஜி என்ற மதகுருவின் ஆலோசனையின் பேரில் சல்மான், அந்த பெண்ணிடம், தன் தம்பியை திருமணம் செய்து விவாகரத்து செய்தால், மீண்டும் மனைவியாக ஏற்றுக்கொள்வேன் என்று கூறினார்.
கேட்டதைச் செய்த பிறகும், இளைய சகோதரர் அவளை விவாகரத்து செய்ய மறுத்துவிட்டார், மேலும் இரு சகோதரர்களும் அவளை பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
சல்மானின் உத்தரவாதத்தின் பேரில் அந்தப் பெண் அவனது சகோதரன் இஸ்லாமை மணந்தார். அதன்பிறகு, சல்மான் மற்றும் இஸ்லாம் இருவரும் தன்னை பல சந்தர்ப்பங்களில் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்," என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் பிடிஐயிடம் தெரிவித்தார்.
புகாரின் அடிப்படையில் குட்டு ஹாஜி, சல்மான், இஸ்லாம் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவளது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
Input From: First Post