தொடரும் லவ் ஜிகாத்! இந்து பெண்ணை மதமாறக் கட்டாயப்படுத்திக் கடத்தி சென்ற ஆசிரியர்!
தொடரும் லவ் ஜிகாத்! இந்து பெண்ணை மதமாறக் கட்டாயப்படுத்திக் கடத்தி சென்ற ஆசிரியர்!
By : Saffron Mom
நாட்டில் தொடர்ந்து லவ் ஜிகாத் குற்றங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. இதனைத் தடுப்பதற்கு பல்வேறு மாநிலங்களில் சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பின்பும் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. உத்தரப் பிரதேசம் மீரட் பகுதியில் லவ் ஜிகாத் வழக்கில் 25 வயது அமன் என்னும் நபரைக் கைது செய்துள்ளனர். இவர் 18 வயது சிறுமியைக் கட்டாயப் படுத்தி வேறு மதத்திற்கு மற்ற கடத்தி சென்றுள்ளார்.
வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்பு, தொடர்புகளில் தடயங்கள் வைத்து மீரட் காவல்துறை டெல்லியில் வைத்துப் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் குற்றவாளி அமனை கைது செய்தது. இருவரையும் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வைத்து சிறுமியிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்தது. அதில் அமன் தன்னை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யச் சொன்னதாகச் சிறுமி தெரிவித்தார். பின்னர் காவல்துறை இந்தியத் தண்டனை கடத்தல் சட்டம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்ட கட்டாய மதமாற்றச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
महानगर अध्यक्ष सचिन सिरोही जी को मुस्लिम लड़के अमान द्वारा लव जिहाद के तहत हिन्दू लडकी के अपहरण की सुचना पर संघठन के कार्यकर्ताओं के साथ नौचंदी थाने पहुंचे और लड़की की तुरंत बरामदगी को लेकर हंगमा किया। pic.twitter.com/QdWaGTYSYI
— हिन्दू जागरण मंच मेरठ महानगर (@HJMMEERUT) February 2, 2021
மீரட்டில் குற்றவாளி அமன் பயிற்சி மையத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் தன்னை ஒரு இந்துவாகக் காண்பித்துக் கொண்டு பழகி வந்துள்ளார். பின்னர் ஓடிப்போகவும் வற்புறுத்தி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் இஸ்லாமிற்கு மதமாற்றினால் தான் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
சிறுமி மறுத்தபொழுது அவளது தம்பியைக் கொலை செய்து விடுவதாகவும் அச்சுறுத்தி உள்ளார். பின்னர் சிறுமி ஒப்புக்கொடு பிப்ரவரி 2 இல் சென்றுள்ளார். அவர் மதமாற்றம் செய்வதற்கு முன்பு மீரட் காவல்துறை தடுத்துவிட்டது.
மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட போது நடவடிக்கை எடுக்கக்கோரி பஜ்ரங் தால் மற்றும் இந்து ஜக்ரான் இயக்கம் காவல் நிலையம் முன்பு குவிந்து இந்த வழக்கு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் கடுமையாகத் தண்டனை வழங்கவும் கேட்டுக்கொண்டது.