Kathir News
Begin typing your search above and press return to search.

உ.பி: திருமணத்திற்கு மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்தியதாக மைனர் சிறுமி குற்றச்சாட்டு.!

உ.பி: திருமணத்திற்கு மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்தியதாக மைனர் சிறுமி குற்றச்சாட்டு.!

உ.பி: திருமணத்திற்கு மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்தியதாக மைனர் சிறுமி குற்றச்சாட்டு.!
X

Saffron MomBy : Saffron Mom

  |  12 Dec 2020 4:27 PM IST

சமீபத்தில் லவ் ஜிகாத் மற்றும் கட்டாய மதமாற்றத்தை எதிராக உத்தரப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களின் புதிய சட்டம் இயற்றப் பெற்றது. அதனைத் தொடர்ந்து பல வழக்குகளும் அந்த சட்டத்தின் கீழ் பதிவாகி வருகின்றது.

தற்போது உத்தரப் பிரதேசம் ஹாடோய் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றால் மதமாற்றம் செய்து கொள்ளவேண்டும் என்று ஒரு இளைஞரை மீது குற்றம் சாட்டியுள்ளார்.

மாவட்டத்தின் சஹாபாத் பகுதியில் இந்த வழக்குப் பதிவாகியுள்ளது. அந்த நபருக்கு எதிராக தற்போது காவல்துறையினர் புதிதாக அமல்படுத்திய கட்டாய மதமாற்ற எதிர்ப்பு சட்டம் 2020 கீழ் FIR பதிவு செய்துள்ளனர். மேலும் இந்தியத் தண்டனை சட்டம் IPC கீழ் மற்றும் POSCO சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

"குற்றம் சாட்டப்பட்டவர் அசாத் என்று கண்டறியப்பட்டு ஷஹாபாத் காவல்நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு பேரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்பிலிருந்ததாகவும் மற்றும் அவர் அந்த சிறுமையைத் திருமணம் செய்வதாக உறுதி அளித்ததாகப் புகாரில் பதிவாகியுள்ளது," என்று ஹாடோய் SP அனுராக் வாட்ஸ் தெரிவித்தார்.

மேலும் நவம்பர் 30 இல் நடைபெறவிருந்த திருமணத்திற்கு முன்னரே மதமாற்றம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதாகச் சிறுமி குற்றம் சாட்டியதாக வாட்ஸ் கூறினார். மேலும் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு வழக்கும் பதிவாகியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் புதிய சட்டம் அமல்படுத்திய பின்பும் திருமணத்திற்குக் கட்டாய மதமாற்றச் செய்யும் வழக்குகள் பல காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News