உ பி: காவல்துறை அதிரடி நடவடிக்கை - புதிய கட்டாய மதமாற்றச் சட்டத்தின் கீழ் 17 பேர் கைது.!
உ பி: காவல்துறை அதிரடி நடவடிக்கை - புதிய கட்டாய மதமாற்றச் சட்டத்தின் கீழ் 17 பேர் கைது.!

உத்தரப் பிரதேசத்தில் மாநிலத்தில் புதிதாக அமல்படுத்திய கட்டாய மதமாற்றச் சட்டத்திற்கு எதிராக செய்யப்படுபவர்கள் மீது உத்தரப் பிரதேச காவல்துறை தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றது. அதன் கீழ் பல கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.
இதுவரை 12 பேருக்கு மேலாக இஸ்லாமிற்கு மதமாற்றக் கட்டாய படுத்தியவர்களையும் மற்றும் மூன்று பேரைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தியவரைக் கைது செய்துள்ளது. எட்டாவில் 21 வயது சிறுமியைக் கட்டாய மதமாற்றம் செய்து அவரை திருமணம் செய்து வைத்ததற்காக எட்டு பேரைக் காவல் துறை கைது செய்துள்ளது. மேலும் அசம்கர் பகுதியில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கானது பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை எட்டாவில் ஜலேஸர் பகுதியில் கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று பதிவு செய்தார். இவர் ஒரு தொழிலதிபர் ஆவார். "14 பேரில் எட்டுபேர் உட்பட இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று காவல் குழு அமைத்து அந்த பெண்ணையும் மற்றும் தலைமறைவாக இருப்பவரைத் தேடி வருகின்றது," என்று துணை காவல் இயக்குநர் ராம் நிவாஸ் சிங் தெரிவித்தார்.
காவல்துறை படி, கடந்த நவம்பர் 17 இல் இருந்து சிறுமி காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவளது பெற்றோர் கடந்த வியாழக்கிழமை அன்றே, அவர்களது வழக்கறிஞர் மதமாற்றம் மற்றும் திருமணம் குறித்துத் தெரிவித்த பிறகு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கானது IPC சட்டம் 366 கீழ் மற்றும் உத்தரப் பிரதேசம் கட்டாய மதமாற்றச் சட்டம் 2020 கீழ் பதிவாகியுள்ளது.
குற்றவாளியான ஜவாத் பெண்ணை கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்துகொண்டதற்கு தன் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு தலைமறைவாக உள்ளார். அவனது உறவினர்கள் எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த எட்டு பெரும் பெண் உட்பட ஆக்ரா அருகே கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது தலைமறைவாக உள்ள குற்றவாளியை வெளியில் கொண்டுவரும் நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார். தலைமறைவாக உள்ள குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.