Kathir News
Begin typing your search above and press return to search.

உ பி: தீபாவளியில் 5.51 லட்ச விளக்குகளுடன் ஒளிரவுள்ள ராமரின் பிறப்பிடம்.!

உ பி: தீபாவளியில் 5.51 லட்ச விளக்குகளுடன் ஒளிரவுள்ள ராமரின் பிறப்பிடம்.!

உ பி: தீபாவளியில் 5.51 லட்ச விளக்குகளுடன் ஒளிரவுள்ள ராமரின் பிறப்பிடம்.!
X

Saffron MomBy : Saffron Mom

  |  8 Nov 2020 12:15 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அயோத்தியில் தீபாவளி பண்டிகையில் யோகி ஆதித்யநாத் தலைமையில் மிகப் பிரம்மாண்டமாக 'தீப திருவிழாவை(தீபொத்ஸவ்)' ஏற்பாடு செய்து வருகின்றனர். அதே போன்று இந்த ஆண்டும் இந்துக்கள் பண்டிகையில் முக்கியம் வாய்ந்த தீபாவளி பண்டிகை பெரிய அளவில் கொண்டாட உள்ளனர். அயோத்தியில் 5.51 லட்ச மண் விளக்குகள் ஏற்படும் என்று முதல்வர் யோகி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் கருத்தில் கொண்டு அதன் வழிகாட்டுதலின் படி பண்டிகை கொண்டாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபொத்ஸவிற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து முடிக்குமாறும் அதிகாரிகளை உத்தரப் பிரதேச முதல்வர் கேட்டுக்கொண்டார். இந்த பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அயோத்தியில் ராமர் ஜென்ம பூமியில் 5.51 லட்ச மண் விளக்குகள் ஏற்றப்படும் என்று மறு ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் தெரிவித்தார்.

ராமர் ஜென்ம பூமிக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகை தந்து அங்கு விளக்குகளை ஏற்றிவைப்பார் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் நீண்ட நாட்களாகச் சர்ச்சைக்குரிய நிலமாக இருந்துவந்த ராமர் கோவில் மற்றும் பாபர் மசூதி வழக்கில் இந்திகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியதை அடுத்து இந்த ஆண்டு தீபொத்ஸவ் முதல் முறையாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

உச்ச மன்ற தீர்ப்பிற்குப் பிறகு கொண்டாடப்படும் இந்த தீபொத்ஸவதில் கொரோனா தொற்றுநோய்க்கான அச்சங்கள் இல்லாதிருந்தால் பல கோடி மக்கள் இதில் கலந்து கொண்டிருப்பர் என்று உத்தரப் பிரதேச சுற்றுலாத் துறை அமைச்சர் நீல்காந்த் திவாரி கூறினார். "500 ஆண்டுகள் போராட்டங்களுக்குப் பின்னர் ராமர் கோவிலைக் கட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு தீபொத்ஸவத்தை மக்கள் காண டிஜிட்டல் முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த கொண்டாட்டத்தை வீட்டிலிருந்து கண்டுகளிக்கவும்," என்று திவாரி கேட்டுக்கொண்டார்.

"இந்த ஆண்டு தீபொத்ஸவதில் 5 லட்ச மண் விளக்குகள் ஏற்றவுள்ளன. மேலும் 500 ஆண்டுகள் நிலுவையிலிருந்து தற்போது ராமர் ஜென்ம பூமியில் கொண்டாடப்படும் நிகழ்வு இது முதல் முறை ஆகும்," என்றும் அவர் தெரிவித்தார்.

2020 தீபொத்ஸவ் நவம்பர் 12 முதல் 16 வரை உத்தரப் பிரதேச சுற்றுலாத் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் ராம் மனோகர் லோஹியா அவத் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News