Kathir News
Begin typing your search above and press return to search.

உ பி: நடனம், ஜீன் உடைகளை அணியாததால் முத்தலாக் வழங்கிய கணவன்!

உ பி: நடனம், ஜீன் உடைகளை அணியாததால் முத்தலாக் வழங்கிய கணவன்!

உ பி: நடனம், ஜீன் உடைகளை அணியாததால் முத்தலாக் வழங்கிய கணவன்!

Saffron MomBy : Saffron Mom

  |  25 Dec 2020 9:25 AM GMT

நாட்டில் முஸ்லீம் சமூகத்திடையே முத்தலாக் வழங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாகவே இருந்துவருகின்றது. முஸ்லீம் ஆண்கள் சிலர் தங்கள் மனைவிகளுக்கு வரதற்சனை, மற்றும் பல சிறு சிறு விஷயங்களுக்கு முத்தலாக் வழங்கி வருகின்றனர். உத்தரப்பிரதேசம் மீரட் மாவட்டத்தில் முஸ்லீம் நபர் ஒருவர் தன் மனைவிக்கு நடனம் மற்றும் ஜீன் போன்ற உடைகளை அணியாததால் முத்தலாக் வழங்கியுள்ளான். பின்னர் அவன் மைத்துனன் வீட்டிற்குச் சென்று தனிக்கு தானே தீ வைத்துக்கொண்டுள்ளான்.

காவல்துறையின் அறிக்கையின் படி, பெண் இஸ்மாயில்புறத்தில் வசித்து வருகிறார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பில்குவாவைச்சேர்ந்த அனாஸ் என்ற நபரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். அனாஸ் டெல்லியில் வேலை செய்து வருகிறார்.
பெண்ணின் குற்றச்சாட்டுப் படி, அனாஸ் அவரை நடனமாடுவது, பாடுவது மற்றும் ஜீன் உடைகளை அணிவதற்கு கட்டாயப்படுத்தி வந்ததாகக் கூறியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. இவர் உள்ளூர் பஞ்சாயத்துக்களுக்கும் புகார் அளித்துள்ளார் ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை.
செவ்வாயன்று இதுபோன்று பிரச்சனைகளுக்காக அனாஸ் அவருக்கு முத்தலாக் வழங்கியுள்ளார். பின்னர் அவர் தன் மாமியார் வீட்டிற்குச் சென்று தீ வைத்துக்கொண்டுள்ளார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறைக்குப் புகாரளித்துள்ளனர். காவல்துறை இவர் தீவைத்துக் கொண்டதற்குப் பின்பு ஏத்தாது காரணங்கள் உள்ளதா என்று விசாரணை செய்து வருகின்றது.
இதே போன்று கடந்த மாதம், 24 வயது முஸ்லீம் இளைஞன் தன் மனைவிக்குத் தொற்று இருந்ததால் முத்தலாக் வழங்கியுள்ளான். பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொல்லப்போவதாக அச்சுறுத்தி பெண்ணின் பெற்றோரிடம் பணம் கோரியுள்ளான். மற்றுமொரு நபர் தன் மனைவி கார் மற்றும் 20 லட்சத்தை வரதட்சணையாகக் கொண்டுவராததால் முத்தலாக் வழங்கியுள்ளான்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News