Kathir News
Begin typing your search above and press return to search.

நான்கு ஆண்டுகளில் 3.75 லட்ச இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கியுள்ள யோகி அரசாங்கம்!

நான்கு ஆண்டுகளில் 3.75 லட்ச இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கியுள்ள யோகி அரசாங்கம்!

நான்கு ஆண்டுகளில் 3.75 லட்ச இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கியுள்ள யோகி அரசாங்கம்!

Saffron MomBy : Saffron Mom

  |  20 Jan 2021 12:47 PM GMT

ஜனவரி 19 ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் இதுவரை 3.75 லட்ச இளைஞர்களுக்கு வெளிப்படையாக வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் எந்தவித ஊழல், ஆதரவு மற்றும் லட்சம் பெறாமல் நேரடியாக நடந்துள்ளது என்றும் கூறினார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் புதிதாக நியமிக்கப்படவுள்ள இடைநிலை கல்வி ஆசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் 436 பேருக்கு வழங்கும் பணி நியமன கடிதம் வழங்கும் விழாவில் உரையாற்றினார். "இந்த ஆண்டு மார்ச் 19 இல் மாநிலத்தில் தற்போதைய அரசாங்கத்தின் நான்கு ஆண்டு முடிவடைகின்றது. அதற்குள் நான்கு லட்ச இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கும் கனவு நிறைவடையும்," என்று முதல்வர் தெரிவித்தார். மேலும் மிஷன் ரோஸ்க்கர் அதன் வேகத்தில் தொடர்ந்து ஈடுபடும். வெளிப்படைத் தன்மை சான்று மாநிலத்தின் உயர் காவல்துறை ஒரு சான்று என்று துணை முதல்வர் Dr தினேஷ் சர்மா கூறினார். மேலும் தற்போது அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஆன்லைன் மூலம் நடைபெறுகின்றது என்று குறிப்பிட்டார்.

டிசம்பர் 2020 இல் 36,950 உதவி ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர். மேலும் ஆகஸ்ட் 2020 இல் 31,277 பள்ளி ஆசிரியர்களுக்குப் பணி நியமன கடிதங்களை வழங்கியது. இடைநிலை கல்வியின் துணை இயக்குநர் வினய் பாண்டே ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பள்ளிகளைத் தேர்வு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது என்று தெரிவித்தார். மேலும் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் உத்தரப் பிரதேச அரசாங்கத்தைப் பாராட்டினார் என்றும் தெரிவித்தார். மேலும் அரசுப் பள்ளிகளில் உதவி ஆசிரியர் பணிக்கு 114 பெண்கள் மற்றும் 24 ஆண்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள நபர்கள் பேராசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தனது உரையின் போது நான்கு ஆண்டுகளில் 1.5 கோடி இளைஞர்களுக்குச் சுயதொழில் செய்ய மாநில அரசாங்கம் உதவி செய்துள்ளது என்றும் முதல்வர் யோகி குறிப்பிட்டார். 2017 இல் இருந்து அதிக அரசாங்க வேலையைக் காவல் துறையில் அரசாங்கம் வழங்கியுள்ளது. மாநிலத்தில் இதுவரை 1,37,253 காவலதிகாரிகளை நியமித்துள்ளது. இரண்டாவதாகக் கல்வித் துறையில் அதிக வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்.
அறிக்கையின் படி, காவல்துறையில் 16,000 இடங்கள், ஆரம்பக் கல்வித் துறையில் 69,000 இடங்கள் மற்றும் UPSSSC யில் 5000 இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு, PWD மற்றும் பிற துறைகளில் 28,000 காலி பணியிடங்கள் உள்ளன விரைவில் அது என்று நிரப்பப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News