சாலைகளில் எச்சில் மற்றும் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு அபராதம்! யோகி அரசு அதிரடி!
சாலைகளில் எச்சில் மற்றும் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு அபராதம்! யோகி அரசு அதிரடி!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் தூய்மைப் படுத்துவதற்காகவும் பல்வேறு திட்டங்களும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த திட்டங்கள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும் மற்றும் இயற்கை முறையைப் பயன்படுத்தும் முறையும் மேற்கொள்ளப்படுகின்றது. தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவர உள்ளது. சாலையில் எச்சில் துப்புவது அல்லது குப்பைகளைக் கொட்டுவது போன்றவற்றுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய நடவடிக்கையானது, உத்தரப் பிரதேச திடக்கழிவு மேலாண்மை திட்டம் 2021 வழிகாட்டுதலின் கீழ் மாநில அரசாங்கம் கொண்டுவர உள்ளது. சமீபத்தில் அரசு நகர்ப்புறத்தில் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்தது. குப்பைகளை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பெறுவது மற்றும் காய்ந்த மற்றும் ஈரமான குப்பைகளுக்கு என தனித்தனி தொட்டிகள் எனத் திட்டத்தைக் கொண்டுவந்தது.
மேலும் அமல்படுத்தப்பட்ட திட்டத்தின் படி, 100 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளவர்கள் இடத்தில் சுத்தம் செய்யாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இடம் மற்றும் குப்பைகள் இருப்பு பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசாங்கம் சாலைகளில் குப்பைகளைக் கொட்டும் விற்பனையாளர்களும் அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் குப்பைகளைக் கொட்டப் பெட்டிகளை வைத்திருக்கவும் உத்தரவிட்டுள்ளது, அதனை மாநகராட்சியில் வாகனங்களில் கழிவு சேகரிக்கும் நபர்களிடம் ஒப்படைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநிலத்தில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கும் யோகி அரசாங்கம் எடுத்து வந்துள்ளது. மேலும் விவசாயிகள் கழிவுப் பொருட்கள் எரிப்பதைத் தடுப்பதற்கும் மற்றும் அவர்களின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதற்கும், பயோ- கோல் உற்பத்தி முறையைத் தொடங்கியது. மேலும் இதன் முதற்கட்ட சோதனையிலும் அது வெற்றி பெற்றது. மேலும் மாநில அரசாங்கம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் மையத்தை அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றது.