காசநோய்க்கு 2025-ம் ஆண்டுக்குள் முற்றுப்புள்ளி வைக்க இலக்கு: பிரதமர் மோடி அரசின் அதிரடி அறிவிப்பு!
IIT, GIC இணைந்து காசநோயைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை புதிதாக உருவாக்க உள்ளது.
By : Bharathi Latha
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், பொதுத்துறை நிறுவனமான ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (GIC) வுடன் இணைந்து, சிறுநீர் அடிப்படையிலான காசநோய் கண்டறிதல் அல்லது பரிசோதனையை உருவாக்க உள்ளது.பல்வேறு நோய்களைக் கண்டறிய தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ரத்த குளுக்கோஸ் மானிட்டர்கள் போன்ற; பாயிண்ட் ஆப் கேர்; கருவிகளைக் காட்டிலும், புதிதாக உருவாக்கப்பட உள்ள சிறுநீர் அடிப்படையிலான காசநோய் பரிசோதனைக் கருவி விரைவாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா-வின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியில் இருந்து செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் மத்திய- மாநில அரசுகளின் சுகாதாரத் துறைகளும் முதன்மை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை சுகாதார மையங்களும் பயன்பெறும். பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் 180-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இருந்து தற்போது வரை ரூ.250 கோடி திரட்டப்பட்டு உள்ளது. இதனைக் கொண்டு 200- க்கும் அதிகமான கூட்டு முயற்சித் திட்டங்களில் ஐ.ஐ.டி மெட்ராஸ் ஈடுபட்டுள்ளது.
நாட்டின் மிகப் பரவலான தொற்றுநோய்களில் ஒன்றான காசநோய்க்கு 2025-ம் ஆண்டுக்குள் முற்றுப்புள்ளி வைக்க (End TB) இந்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இந்த முயற்சிகள் தடைபட்டுள்ளன. காசநோய் பரவாமல் கட்டுப்படுத்த அதனை சரியான நேரத்தில், விரைவான மற்றும் அணுகக் கூடிய முறையில் கண்டறிவது மிகவும் அவசியமான ஒன்றாக தற்போது மாறி இருக்கிறது.
Input & Image courtesy: News