Begin typing your search above and press return to search.
அமெரிக்க தூதரக ஊழியர்கள் விரும்பினால் நாடு திரும்பலாம்.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது.

By : Thangavelu
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள அமெரிக்க மக்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அந்நாடு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரங்களில் பணியாற்றுபவர்களின் குடும்பத்தினர் விரும்பினால் உடனடியாக நாடு திரும்பலாம் என அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் 2ம் அலை மோசமாக இருப்பதால், இந்திய வந்துள்ள அமெரிக்க பயணிகள் விரைவாக திரும்பிவர வேண்டும் எனவும் அமெரிக்க அரசு நேற்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக, இப்போது தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரும் நாடு திரும்பலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் இது கட்டாயப்படுத்துவதாக இல்லை, விரும்பினால் நாடு திரும்பலாம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story
