Kathir News
Begin typing your search above and press return to search.

காது கேளாத மற்றும் ஊனமுற்ற நபர்களை கட்டாயப்படுத்தி இஸ்லாத்துக்கு மதம் மாற்றிய போலி மருத்துவர்!

Uttar Pradesh Mass Conversion Case: After Islamic Scholar, UP ATS Arrests

காது கேளாத மற்றும் ஊனமுற்ற நபர்களை கட்டாயப்படுத்தி இஸ்லாத்துக்கு மதம் மாற்றிய போலி மருத்துவர்!
X

MuruganandhamBy : Muruganandham

  |  28 Sep 2021 2:44 AM GMT

உத்தரப்பிரதேச காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு மத மாற்ற மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட மதகுரு மௌலானா கலீம் சித்திக்கி, நாடு முழுவதும் மிகப்பெரிய மதமாற்ற குழுவை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் செப்டம்பர் 22-ம் தேதி கைது செய்யப்பட்டு 10 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மவுலானா கலீம், பஹ்ரைன் வழியாக சட்டவிரோதமாக ரூ .1.5 கோடியும், மற்ற வளைகுடா நாடுகளிலிருந்து ரூ 3 கோடியும், மொத்தமாக ரூ20 கோடி வரை பெறப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்திய மருத்துவக் கவுன்சில் தேர்விலும் மௌலானா கலீம் சித்திக்கு தொடர்பு உள்ளது.

ரஷ்யாவில் வசிக்கும் போது மதம் மாற்றப்பட்டு, சட்டவிரோதமாக நாசிக்கில் மருத்துவ கிளினிக் நடத்தி வந்தார். அவர் எம்சிஐ தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு இந்தியாவில் மருத்துவம் பயிற்சி செய்ய அது கட்டாயம் வேண்டும்

குற்றம்சாட்டப்பட்ட இத்ரிஸ் குரேஷி, கலீம் சித்திக் நடத்தும் ஜம்இய்யதுல் இமாம் வலியுல்லா அல் இஸ்லாமியா மதரஸாவுக்கு கடந்த 20 ஆண்டுகளாக நிதி சேகரித்தார் மேலும் மதரஸாவின் செயல்பாடுகளிலும் தீவிரமாக உள்ளார். மேற்கண்ட மதரஸா குற்றம் சாட்டப்பட்ட கலீம் சித்திக்கின் மதமாற்ற மையமாக இயங்குகிறது.

"சமூக நல்லிணக்கத் திட்டம் என்ற போர்வையில், குற்றம் சாட்டப்பட்டவர்களால் சட்டவிரோத மதமாற்ற கும்பல் செயல்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன" என்று காவல்துறை அதிகாரி கூறினார்.

காவல்துறை நடத்திய விசாரணையில், காது கேளாத மற்றும் பேச்சு குறைபாடுள்ள குழந்தைகளை இஸ்லாமுக்கு மாற்றவும், பின்னர் அவர்களை மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தவும் ஒரு மோசமான திட்டத்தை வகுத்தனர் என்பது தெரியவந்தது.

அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்ட முப்தி காசி ஜஹாங்கீர் காஸ்மி மற்றும் முகமது உமர்ஆகியோர் பாகிஸ்தானின் பிரபல உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ அமைப்பிடமிருந்து இருந்து நிதி பெற்றனர். டெல்லியின் ஜாமியா நகரைச் சேர்ந்த இந்த இருவரும் சுமார் 1000 பேரை கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றியதில் ஈடுபட்டனர். குறிப்பாக காது கேளாத மற்றும் ஊனமுற்ற நபர்களை குறிவைத்தனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News