100% கொரோனா தடுப்பூசி: மக்களின் ஒத்துழைப்புடன் சாதனை படைத்த இந்திய நகரம் !
புவனேஷ்வர் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய முதல் இந்திய நகரம் என்னும் சாதனையை படைத்துள்ளது.
By : Bharathi Latha
ஒடிசாவின் தலைநகர் புவனேஷ்வரில் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 100% தடுப்பூசி செலுத்தி சாதனையை நிகழ்த்திய முதல் நகரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. புவனேஸ்வரில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை அனைத்து மக்களுக்கும் குறிப்பாக 18 வயது நிரம்பிய அனைவருக்கும் போடப்பட்டுள்ளது. இதுதவிர புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புவனேஷ்வர் மாநகராட்சி உதவி கமிஷனர் அன்ஷுமன் ராத் கூறுகையில்: கொரோனாவுக்கு எதிராக புவனேஷ்வரில் 100 சதவீதம மக்கள் தொகைக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதோடு புவனேஷ்வரில் உள்ள சுமார் ஒரு லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஜூலை 31ம் தேதிக்குள் புவனேஷ்வரில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது என்று இலக்கு நிர்ணயித்தோம்.
அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட 9 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு 2வது தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தி விட்டோம். 100 % என்ற இலக்கை எட்ட நகரம் முழுதும் 55 தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் 30 மையங்கள் இயக்கப்பட்டன. குறிப்பாக நடமாடும் தடுப்பூசி மையங்களும் நகரம் முழுதும் ஏற்படுத்தப்பட்டன. இது தவிர பள்ளிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக நோய் தடுப்பாற்றல் மையங்கள் 15 என்ற எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன என்பதும் கவனிக்கத்தக்கது" என்று அவர் கூறினார்.
Image courtesy: India Today