வளர்ந்த நாடுகளை விட முன்னேறிய பாரதம் ! ஒரே மாதத்தில் 18 கோடி டோஸ் செலுத்தி சாதனை !
வளர்ந்த நாடுகளைவிட இந்தியா தற்போது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் நாடு முழுதும் 18 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
By : Bharathi Latha
உலகின் வளர்ந்த நாடுகள் இணைந்து வழங்கியதை விட அதிகமாக தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி தொடர்பாக, சமூக வலைதளத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள பதிவில் இதுபற்றி கூறுகையில், "கடந்த மாதம் மட்டும் 18 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. G-7 நாடுகள் இணைந்து, இதுவரை 10.1 கோடி தடுப்பூசிகள் மட்டுமே வழங்கியுள்ளன. ஆனால் அதைவிட அதிகமாக இந்தியா தடுப்பூசிகளைக் மக்களுக்கு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி வழங்குவதில் புதிய சாதனையை எட்டியுள்ளோம். G-7 நாடுகளில் கனடா 30 லட்சம், பிரிட்டன் 50 லட்சம், இத்தாலி 80 லட்சம், ஜெர்மனி 90 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தியுள்ளன. பிரான்ஸ் 1.3 கோடி, அமெரிக்கா 2.3 கோடி, ஜப்பான் 4 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கி உள்ளன. இந்தியாவில் குறிப்பாக ஜனவரி 16ல் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட்டது.
இதுவரை 68.4 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 16 கோடி பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். அதே நேரத்தில் 52.3 கோடி பேர், முதல் டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர் என்று மத்திய அரசு வழங்கிய செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே வளர்ந்த நாடுகளைவிட இந்தியா எதிர் முன்னேறி இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Image courtesy:economic times