Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மற்றொரு மைல்கல்லை பதித்த இந்தியா !

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 48 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மற்றொரு மைல்கல்லை பதித்த இந்தியா !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 Aug 2021 12:44 PM GMT

இந்தியாவில் தற்போது தான் மக்கள் இந்த நோய் தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகளை அதிகமாக போட்டுக்கொண்டு வருகிறார்கள். வரவிருக்கும் பல்வேறு அலைகளை எதிர் கொள்வதற்கு ஏற்ற விதமாக தடுப்பூசி மிக முக்கிய பங்கு வகிக்கின்றது என்று உலக சுகாதார நிறுவனம்(WHO) ஏற்கனவே எச்சரித்துள்ளது. அதன்படி தற்போது மத்திய அரசு தடுப்பூசி குறித்து சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று சொல்லலாம்.


எனவே இந்தியாவில் மொத்தமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விவரத்தை சுகாதாரத்துறை இன்று குறிப்பிட்டுள்ளது. இன்று காலை தகவலின்படி, மொத்தம் 56,83,682 முகாம்களில் 48,52,86,570 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 62,53,741 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. மேலும் குணமடைந்தவர்கள் 97.37 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42,625 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.


கடந்த சில நாட்களாக தொடர்ந்து 38 நாள்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,10,353 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.29 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 18,47,518 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 47,31,42,307 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Input: https://www.news18.com/news/india/coronavirus-news-live-updates-amid-3rd-wave-fears-delhi-12-other-states-record-steady-rise-in-cases-kerala-tops-covid-19-testing-raj-lowest-4038515.html

Image courtesy: news18


Next Story
கதிர் தொகுப்பு
Trending News